SA vs IND, 1st Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Thu, Dec 23 2021 12:49 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. 

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்டாக வருகிற 26ஆம் தேதி செஞ்சுரியனில் நடைபெறுகிறது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்கா vs இந்தியா
  • இடம் - சூப்பர் ஸ்போர்ட் மைதானம், செஞ்சுரியன்
  • நேரம் - மதியம் 1.30 மணி

போட்டி முன்னோட்டம்

டீன் எல்கர் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி டி காக், மார்க்ரம், வெண்டர் டுசென், பவுமா என சிறப்பான பேட்டிங் ஆர்டரைக் கொண்டுள்ளது.

அதேசமயம் ரபாடா, இங்கிடி, மஹாராஜ் என பந்துவீச்சாளர்களும் இருப்பது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் காயம் காரணமாக அன்ரிச் நோர்ட்ஜே டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளது அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தும். 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. 

கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், விஹாரி என சிறப்பான பேட்டிங் ஆர்டரையும், அஸ்வின், பும்ரா, சிராஜ் போன்ற பந்துவீச்சாளர்களும் இருப்பது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. 

மேலும் புஜாரா, ரஹானே ஆகியோர் தங்கள் திறனை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், அவர்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 39
  • தென் ஆப்பிரிக்க வெற்றி - 15
  • இந்தியா வெற்றி - 14

உத்தேச அணி

தென் ஆப்பிரிக்கா - டீன் எல்கர் (கே), ஐடன் மார்க்ரம், டெம்பா பவுமா, ரஸ்ஸி வான்டெர் டுசென், கைல் வெர்ரேய்ன், குயின்டன் டி காக், வியான் முல்டர், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, டுவான் ஒலிவியர், லுங்கி இங்கிடி.

இந்தியா - கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி, அஜிங்கியா ரஹானே/ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ஆர் அஸ்வின், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்/இஷாந்த் சர்மா

ஃபெண்டஸி லெவன் 

  • விக்கெட் கீப்பர்கள் - ரிஷப் பந்த்
  • பேட்டர்ஸ் - விராட் கோலி, கேஎல் ராகுல், ஐடன் மார்க்ரம், டீன் எல்கர்
  • ஆல்-ரவுண்டர்கள் - ரவிச்சந்திரன் அஸ்வின்
  • பந்துவீச்சாளர்கள் - ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, டுவான் ஒலிவியர், ககிசோ ரபாடா, ஷர்துல் தாக்கூர்.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை