SA vs IND : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சீரிஸை கைப்பற்றுமா கோலி & கோ?
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதில் இரு அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி இண்டு செஞ்சூரியன் சூப்பா் ஸ்போா்ட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
இந்திய அணியில் 11 பேட்டா்கள், 8 பௌலா்கள் இடம் பெற்றுள்ளனா். பேட்டிங் வரிசையில் கேப்டன் விராட் கோலி, மயங்க் அகா்வால், புஜாரா, ஸ்ரேயஸ் ஐயா், கேஎல் ராகுல், ரிஷப் பந்த் ஆகியோா் வலு சோ்க்கின்றனா்.
மேலும் இந்திய அணி வலுவான பௌலிங் வரிசையைக் கொண்டுள்ளது. வேகப்பந்து வீச்சில் பும்ரா, இஷாந்த் சா்மா, முகமது சமி, சுழற்பந்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோா் மீது அதீத எதிர்பார்ப்புகள் உள்ளது.
பலமில்லாத பேட்டிங்:
அதே நேரம் தென் ஆப்பிரிக்க அணிக்கு உள்ளூரில் டெஸ்ட் நடைபெறுவது சாதகமான அம்சமாகும். ஆனால் பேட்டிங் வரிசை பலமின்றி உள்ளது. கேப்டன் டீன் எல்கா், டெம்பா பவுமா, ஐடன் மாா்க்ரம், குயின்டன் டி காக் உள்ளிட்டோா் பேட்டிங் வரிசையை பலப்படுத்த வேண்டும்.
அதே வேளையில் பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்க சிறப்பான பௌலா்களை கொண்டுள்ளது. காகிசோ ரபாடா, கேசவ் மகாராஜ், லுங்கி இங்கிடி ஆகியோரை அந்த அணி மலை போல் நம்பி உள்ளது.
இந்திய அணி கடந்த 2021-இல் 13 ஆட்டங்களில் விளையாடி 3இல் மட்டுமே தோல்வி கண்டுள்ளது. எனினும் பெரும்பாலானவை உள்ளூரில் பெற்ற வெற்றியாகும். தென் ஆப்பிரிக்காவில் முதல் சீரிஸ் வெற்றியை பெற இந்தியா முனையும். அண்மையில்
உத்தேச அணி
தென் ஆப்பிரிக்கா - டீன் எல்கர் (கே), ஐடன் மார்க்ரம், டெம்பா பவுமா, ரஸ்ஸி வான்டெர் டுசென், கைல் வெர்ரேய்ன், குயின்டன் டி காக், வியான் முல்டர், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, டுவான் ஒலிவியர், லுங்கி இங்கிடி.
இந்தியா - கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி, அஜிங்கியா ரஹானே/ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ஆர் அஸ்வின், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்/இஷாந்த் சர்மா