தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான், சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Thu, Nov 03 2022 10:44 IST
South Africa vs Pakistan, T20 World Cup, Super 12 - Cricket Match Prediction, Where To Watch, Probab (Image Source: Google)

எட்டாவது சீசன் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றிலிருந்து எந்த 4 அணிகள் அறையிறுதிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் நடப்பு தொடரில், 2 வெற்றி, ஒரு முடிவில்லை என்று 5 புள்ளிகளுடன் உள்ள பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் சிக்கலின்றி அரைஇறுதிக்குள் நுழைந்து விடும். ஒரு வேளை தோற்றாலும் கடைசி லீக்கில் நெதர்லாந்தை தோற்கடித்தால் போதுமானது. முந்தைய ஆட்டத்தில் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய தென்ஆப்பிரிக்க அணி அதே வேட்கையுடன் பாகிஸ்தானையும் போட்டுத்தாக்க ஆயத்தமாக உள்ளது.

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி , 2 தோல்வி என்று 2 புள்ளிகளுடன் பின்தங்கியிருக்கிறது. அந்த அணியை பொறுத்தவரை எஞ்சிய இரு ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். அதன் பிறகு மற்ற போட்டிகளின் முடிவு சாதகமாக அமைய வேண்டும். அதாவது தென்ஆப்பிரிக்க அணி தனது கடைசி லீக்கில் தோற்க வேண்டும். இல்லாவிட்டால் இந்திய அணி, தனது கடைசி போட்டியில் ஜிம்பாப்வேயிடம் மோசமான தோல்வியை தழுவ வேண்டும். 

இது போன்று நடந்தால் மட்டுமே பாகிஸ்தானுக்கு அரையிறுதி கதவு திறக்கும். ஆனால் இன்றைய ஆட்டத்தில் தோற்றால் நடையை கட்ட வேண்டியது தான். கேப்டன் பாபர் அசாம் 3 ஆட்டத்திலும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. இதனால் தான் ஜிம்பாப்வேயிடம் கூட ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்க நேர்ந்தது. அவர் பார்முக்கு திரும்ப வேண்டிய தவிப்பில் உள்ளார்.

மேலும் வானிலையை பொறுத்தவரை அங்கு இன்று மழை பெய்வதற்கு 11 சதவீதம் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா
  • இடம் - சிட்னி கிரிக்கெட் மைதானம்
  • நேரம் - மதியம் 1.30 மணி

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 21
  • பாகிஸ்தான் - 11
  • தென் ஆப்பிரிக்கா - 10

உத்தேச லெவன்

தென் ஆப்பிரிக்கா: குயின்டன் டி காக், டெம்பா பவுமா(கே), ரிலீ ரோசோவ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வெய்ன் பார்னெல், கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, ஆண்ட்ரிச் நோர்ட்ஜே

பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் அசாம்(கே), ஷான் மசூத், ஃபகார் ஜமான், இஃப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்: குயின்டன் டி காக், முகமது ரிஸ்வான்
  • பேட்: பாபர் அசாம், ரிலீ ரோசோவ், டேவிட் மில்லர்
  • ஆல்ரவுண்டர்: ஐடன் மார்க்ரம், ஷதாப் கான், வெய்ன் பார்னெல்
  • கிண்ணம்: ஹரிஸ் ரவுஃப், முகமது வாசிம் ஜூனியர், லுங்கி இங்கிடி
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை