தென் ஆப்பிரிக்கா vs ஜிம்பாப்வே, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Sun, Oct 23 2022 16:58 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை தொடரின் 8ஆவது சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நாளை நடைபெறும் சூப்பர் 12 போட்டியில் தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி ஹாபர்ட்டில் நடைபெறுகிறது.

டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி டி20 கிரிக்கெட்டில் சிறப்பன ஆட்டத்தை வெளிப்படுத்தி, நடப்பு உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது.

ஏனெனில் குயின்டன் டி காக், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், ரைலீ ரூஸோவ், ஐடன் மார்கம், ஸ்டிரிஸ்டன் ஸ்டப்ஸ் என பல அதிரடி பேட்டர்களும், காகிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, வெய்ன் பார்னெல், மார்கோ ஜான்சென் ஆகியோரும் மஹாராஜ், ஷம்ஸி உள்ளிட்டோரும் இருப்பது அந்த அணிக்கான வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.

அதேசமயம் மறுமுனையில் ஜிம்பாப்வே அணி சமீப காலங்களில் பல சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களுக்கான திறனை வெளிப்படுத்தி வருகிறது. அதிலும் அந்த அணியின் மிக முக்கிய வீரராக பார்க்கப்படுபவர் சிக்கந்தர் ரஸா தான்.

ஏனெனில் சிக்கந்தர் ரஸா கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளில் 45 அவரேஜுடன் 136 ரன்களை விளாசி அசத்தியுள்ளார். அவருக்கு துணையாக வெஸ்லி மதவெரே, கிரேய்க் எர்வின், லுக் ஜோங்வா ஆகியோரும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அந்த அணி சவாலான இலக்கை நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் பந்துவீச்சில் பிளசிங் முஸரபானி, டெண்டாய் சதாரா, ரிச்சர்ட் நகர்வா, ரியான் பர்ல், மில்டன் ஷும்பா ஆகியோருடன் சிக்கந்தர் ரஸாவும் அபாரமாக பந்துவீசி வருவது அந்த அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்கா vs ஜிம்பாப்வே
  • இடம் - ஓவல்,ஹாபர்ட்
  • நேரம் - மதியம் 1.30 மணி (இந்திய நேரப்படி)

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 6
  • தென் ஆப்பிரிக்கா - 5
  • ஜிம்பாப்வே - 0
  • முடிவில்லை - 1

உத்தேச லெவன்

தென் ஆப்பிரிக்கா: டெம்பா பவுமா (கே), குயின்டன் டி காக், ரிலீ ரோசோவ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வெய்ன் பார்னெல், கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, லுங்கி இங்கிடி.

ஜிம்பாப்வே: கிரெய்க் எர்வின் (கே), ரெஜிஸ் சகாப்வா, வெஸ்லி மாதேவெரே, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, மில்டன் ஷும்பா, ரியான் பர்ல், லூக் ஜாங்வே, ரிச்சர்ட் நகரவா, டெண்டாய் சதாரா, பிளெசிங் முசரபானி

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்- குயின்டன் டி காக், ரெஜிஸ் சகப்வா
  • பேட்டர்- டேவிட் மில்லர், ரிலீ ரோசோவ், கிரேக் எர்வின்
  • ஆல்-ரவுண்டர்- சிக்கந்தர் ராசா, ஐடன் மார்க்ரம்
  • பந்து வீச்சாளர்- லூக் ஜோங்வே, ரிச்சர்ட் ங்கராவா, ககிசோ ரபாடா, வெய்ன் பார்னெல்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை