நியூசிலாந்து டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் டிம் சௌதீ!

Updated: Wed, Oct 02 2024 09:40 IST
Image Source: Google

நியூசிலாந்து அணியானது சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் நியூசிலாந்து அணி இரண்டு போட்டியிலும் இலங்கை அணியிடம் படுதோல்வியைத் தழுவியதுடன், ஒயிட்வாஷ் ஆனது. 

இந்த தோல்வியின் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 37,50 புள்ளிகளுடன் 6ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து நியூசிலாந்து அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இத்தொடரானது எதிவரும் அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 05ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான படுதோல்வியின் காரணமாக நியூசிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதீ விலகுவதாக அறிவித்துள்ளார். முன்னதாக கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதை அடுத்து, டிம் சௌதீ டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் இவரது தலைமையில் நியூசிலாந்து அணி அடுத்தடுத்து போட்டிகளில் தோல்வியைத் தழுவியது. 

இதனால் கேப்டன் மற்றும் அணி வீரர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் இத்தொடருக்கு பொறுபேற்கும் வகையில் நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து டிம் சௌதீ விலகுவதாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக நியூசிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக டாம் லேதம் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் எதிர்வரும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் டாம் லேதமே அணியின் கேப்டனாக வழிநடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேற்கொண்டு இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியை நாளை மறுதினம் (அக்.04) நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிக்கவுள்ளது. மேலும் இந்த டெஸ்ட் அணியில் வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதீ இடம்பிடிப்பார் என்பதையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதிசெய்துள்ளது.  

Also Read: Funding To Save Test Cricket

இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட் தொடர்

  • முதல் டெஸ்ட் போட்டி - அக்டோபர் 16 - 20 - பெங்களூரு
  • இரண்டாவது டெஸ்ட் - அக்டோபர் 24 - 28 - புனே
  • மூன்றாவது டெஸ்ட் - நவம்பர் 01- 05 - மும்பை 
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை