சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக வருண் அரோன் நியமனம்!

Updated: Mon, Jul 14 2025 21:09 IST
Image Source: Google

Indian Premier League: ஐபிஎல் தொடரின் 2026ஆம் ஆண்டிற்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் வருண் ஆரோன் நியமிக்கப்பட்டுள்ளார்.  

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் கடந்த மாதம் நடந்து முடிந்தது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இறுதிப்போட்டியில் மோதின. இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றதுடன், முதல் முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. 

அதேசமயம் இத்தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது விளையாடிய 14 போட்டிகளில் 6 வெற்றி, 7 தோல்விகள் ஒரு முடிவில்லை என மொத்தமாக 13 புள்ளிகளை மட்டுமே பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் இழந்து லீக் சுற்றுடன் வெளியேறியது. எப்போது அதிரடிக்கு பெயர் போன சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு துறையில் சரிவர செயல்படாததே தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் தற்சமயம் அந்த அணி நிர்வாகம் அடுத்த சீசனுக்கான வேலைகளை தொடங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் வருண் ஆரோனை நியமித்துள்ளது. முன்னதாக நியூசிலாந்தின் ஜேம்ஸ் ஃபிராங்க்லின் சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சாளராக செயல்பட்டு வந்த நிலையில் அவரை அணி நிர்வாகம் நீக்கி இந்த முடிவை எடுத்துள்ளது. 

வருண் ஆரோன் குறித்து பேசினால் இந்திய அணிக்காக கடந்த 2011ஆம் ஆண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். இதில் அவர் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளையும், 9 ஒருநாள் போட்டிகளில் 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதன்பின் காயம் மற்றும் ஃபார்ம் காரணமாக கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பானது கிடைக்கவில்லை. 

Also Read: LIVE Cricket Score

மேற்கொண்டு ஐபிஎல் தொடரில் அவர் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை 52 போட்டிகளில் விளையாடி 44 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் அவர் டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளில் இடம்பிடித்துள்ளார். அதிலும் குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்ற போது அந்த அணியின் ஒரு அங்கமாகவும் இவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை