ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச லெவன்!

Updated: Sun, May 19 2024 12:58 IST
Image Source: Google

 

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் இன்று மாலை நடைபெறும் 69ஆவது லீக் ஆட்டத்தில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், இரண்டாம் இடத்தை பிடிக்க இந்த போட்டியில் வெற்றிபெறுவது அவசியமாகும். அதேசமயம் பஞ்சாப் கிங்ஸ் அணியை பொறுத்தவரையில் தொடரை வெற்றியுடன் முடிக்க முனைப்பு காட்டும். இந்நிலையில் இப்போட்டிக்கான இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ள 13 போட்டிகளில் 7 வெற்றி, 5 தோல்வி என 15 புள்ளிகளுடன் மூன்றாம் இடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதியான நிலையில், இப்போட்டியில் வெற்றி பெற்றால் இரண்டாம் இடத்துக்கான வாய்ப்பை பெறலாம். அதேபோல, பிளே ஆஃப் சுற்றில் முதல் இரண்டு இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்குத் தோற்றாலும் மற்றொரு வாய்ப்பு கிடைக்கும் என்ற கரணத்தால் ஹைதராபாத் அணி கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுடுகிறது. 

அணியின் பேட்டிங் ஆர்டரைப் பொறுத்தவரையில் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், ஹென்ரிச் கிளாசென், நிதீஷ் குமார் ரெட்டி, அப்துல் சமத் ஆகியோர் இருப்பது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. இவர்களுடன் ஐடன் மார்க்ரம், கிளென் பிலீப்ஸ் உள்ளிட்டோரும் களமிறங்கினால் நிச்சயம் பந்துவீச்சாளர்களுக்கு தலைவலி தான். மறுபக்கம் பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், நடராஜான், ஜெய்தேவ் உனாத்கட், பாட் கம்மின்ஸ், மார்கோ ஜான்சென், ஷபாஸ் அஹ்மத், நிதீஷ் குமார் போன்ற வீரர்கள் இருப்பதால் நிச்சயம் ஹைதராபாத் அணி வெற்றிபெற அதிகபடியான வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உத்தேச லெவன்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் தலைவர், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கே), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, தங்கராசு நடராஜன்.

பஞ்சாப் கிங்ஸ் 

பஞ்சாப் அணியைப் பொருத்தவரை நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், தொடரை வெற்றியுடன் முடிக்கும் நோக்கில் இந்த போட்டியில் களமிறங்கவுள்ளது. இந்த அணியில் காயம் காரணமாக ஷிகர் தவான் மற்றும் காகிசோ ரபாடா விலகியுள்ள நிலையில், பாகிஸ்தன் அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து வீரர்கள் சாம் கரன், ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் தாயகம் திரும்பியுள்ளனர். இதன் காரணமாக இன்றைய போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஜித்தேஷ் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும் இன்றைய போட்டியில் வெளிநாட்டு வீரர்களாக ரைலீ ரூஸோவ் மற்றும் நாதன் எல்லிஸ் ஆகியோர் மட்டும் அணியில் இடம்பிடிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பேட்டிங்கில் பிரப்ஷிம்ரன் சிங், ஷஷாங்க் சிங், அஷுதோஷ் சர்மா போன்ற அதிரடி வீரர்கள் நம்பிக்கை கொடுக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். மறுபக்கம் பந்துவீச்சை எடுத்துக்கொண்டால் ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், ராகுல் சஹார், ஹர்ப்ரீத் பிரார் ஆகியோரும் சிறப்பான ஃபார்மில் உள்ளதால் நிச்சயம் அந்த அணி வெற்றிக்காக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பஞ்சாப் கிங்ஸ் உத்தேச லெவன்: பிரப்ஷிம்ரன் சிங், அதர்வா டெய்டே, ரைலீ ரூஸோவ், ஷஷாங்க் சிங், ஜிதேஷ் சர்மா, அஷுதோஷ் சர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், நாதன் எல்லிஸ், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை