ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ்- உத்தேச லெவன்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்றுவந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முன்னேறியுள்ள நிலையில், இரண்டாவதாக எந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் சமபலத்துடன் இருந்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இவ்விரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது கொல்கத்தா அணிக்கு எதிரான முதலாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் படு தோல்வியைச் சந்தித்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது முதலாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியுள்ளது அந்த அணிக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. இதனால் இன்றைய போட்டியில் அந்த அணி கம்பேக் கொடுக்க கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணியின் பேட்டிங் ஆர்டரில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, நிதீஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமாத் உள்ளிட்ட வீரர்கள் எதிரணிக்கு தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களுடன் பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், நடராஜன், மயங்க் மார்கண்டே, விஜயகாந்த் வியாஸ்காந்த்,ஷபாஸ் அஹ்மத், ஜெய்தேவ் உனாத்கட் ஆகியோரும் கேப்டன் பாட் கம்மின்ஸும் சிறப்பான ஃபார்மில் உள்ளது அணிக்கு சாதமாக உள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் தலைவர், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, தங்கராசு நடராஜன்.
ராஜஸ்தான் ராயல்ஸ்
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது ஆர்சிபி அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆடத்தில் வெற்றிபெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. ஏனெனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னதாக அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்த அந்த அணியானது தற்போது மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளதால், நிச்சயம் இப்போட்டியிலும் அபாரமாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் சஞ்சு சாம்சன், ரியான் பராக் ஆகியோரை மட்டுமே பெரிதும் சார்ந்திருப்பது அணிக்கு பெரும் பலவீனமாகி உள்ளது. அதனால் அவர்களுடன் அதிரடி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்ஆல் சிறப்பாக செயல்படுவது அவசியமாகும். அதேசமயம் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ள ஜோஸ் பட்லருக்கு பதிலாக களமிறங்கும் டாம் கொஹ்லர் காட்மோரும் அதிரடியான தொடக்கத்தைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
அவர்களுடன் ஷிம்ரான் ஹெட்மையர், துருவ் ஜுரெல் போன்ற வீரர்களும் சிறப்பாக செயல்பட்டால் அந்த அணியால் வெற்றியை ஈட்டமுடியும். பந்துவீச்சைப் பொறுத்தவரையில் சந்தீப் சர்மா, டிரெண்ட் போல்ட், ஆவேஷ் கான், நந்த்ரே பர்கர் ஆகியோருடன் ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தேச லெவன்: டாம் கோஹ்லர் காட்மோர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மையர், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரென்ட் போல்ட், சந்தீப் சர்மா, அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல்