நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

Updated: Mon, Sep 16 2024 14:33 IST
Image Source: Google

இலங்கை அணி சமீபத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியானது அபார வெற்றியைப் பெற்றதுடன, டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் முடித்து அசத்தியது. 

இதனையடுத்து இலங்கை அணி தங்களுடைய சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 18 முதல் 22ஆம் தேதி வரை முதல் டெஸ்ட் போட்டியிலும், செப்டம்பர் 26 முதல் 30ஆம் தேதிவரையிலும் விளையாடவுள்ளது. மேலும் இத்தொடரின் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் கலேவில் நடைபெறவுள்ளது. மேலும் இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

மேலும் இத்தொடருக்கன் நியூசிலாந்து அணி கடந்த மாதமே அறிவிக்கப்பட்டது. அதன்படி, டிம் சௌதீ தலைமையிலான நியூசிலாந்து டெஸ்ட் அணியில் டாம் லேதம் துணைக்கேப்டனாக மீண்டும் செயல்படவுள்ளார். மேற்கொண்டு வில்லியம் ஓ ரூர்க் மற்றும் பென் சீயர்ஸ் ஆகியோருக்கும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுடம் காயம் காரணமாக நீண்ட காலமாக அணியில் இடம்பிடிக்காமல் இருந்த மைக்கேல் பிரேஸ்வெல் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். 

இந்நிலையில் நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான 16 பேர் உள்ளடக்கிய இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி தனஞ்செயா டி சில்வா தலைமையிலான இந்த அணியில் ஒஷாதா ஃபெர்னாண்டோவிற்கு மீண்டு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட தவறிய நிஷன் மதுஷங்கா அணியில் இருந்து நீக்கப்பட்டு, ஃபெர்னாண்டோவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இவர்களைத் தவிர்த்து திமுத் கருணாரத்னே, பதும் நிஷங்கா, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமால், கமிந்து மெண்டிஸ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுக்கு அணியில் தங்கள் இடங்களை தக்கவைத்துள்ளனர். மேற்கொண்டு லஹிரு குமாரா, பிரபாத் ஜெயசூர்யா, மிலன் ரத்நாயக்க, அசிதா மற்றும் பினுரா ஃபெர்னாண்டோ உள்ளிட்டோரும் டெஸ்ட் அணியில் தங்கள் இடங்களை தக்கவைத்துள்ளனர். 

இலங்கை டெஸ்ட் அணி: தனஞ்சய் டி சில்வா (கேப்டன்), திமுத் கருணாரத்ன, பதும் நிஷங்க, குசால் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, ஓஷதா ஃபெர்னாண்டோ, அசிதா ஃபெர்னாண்டோ, விஷ்வா ஃபெர்னாண்டோ, லஹிரு குமார, பிரபாத் ஜயசூரிய, ரமேஷ் மெண்டிஸ், ஜெப்ரி வான்டர்சே, மிலன் ரத்நாயக்க.

Also Read: Funding To Save Test Cricket

நியூசிலாந்து டெஸ்ட் அணி: டிம் சௌதீ (கே), டாம் பிளென்டல், மைக்கேல் பிரேஸ்வெல், டெவான் கான்வே, மேட் ஹென்றி, டாம் லேதம், டேரில் மிட்செல், வில்லியம் ஓ ரூர்க், அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், பென் சியர்ஸ், கேன் வில்லியம்சன், வில் யங்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை