இலங்கை அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 10ஆம் தேதி முடிவடையவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

அந்த அணியில் நட்சத்திர வீரர் ஸாக் கிரௌலி மற்றும் திலான் பென்னிங்டன் ஆகியோர் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளனர். அதேசமயம் அவர்களுக்கு மாற்றாக அறிமுக வீரர் ஜோர்டன் காக்ஸ், மற்றும் ஒல்லி ஸ்டோன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் விளையாடிய வீரர்களே இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளனர்.

Advertisement

அதேசமயம் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியின் கேப்டனாக தனஞ்செயா டி சில்வா தொடர்கிறார். இந்த அணியில் அறிமுக வீரர்களான நிசலா தாரகா, மிலன் ரத்னயகே ஆகியோருடன், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜெஃப்ரி வண்டர்சேவுக்கும் இலங்கை டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது. இதையடுத்து இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி இன்று முதல் தங்கள் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. 

 

இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் இயன் பெல் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஆஷ்லி டி சில்வா, “இங்கிலாந்தில் உள்ள நிலைமைகள் குறித்த முக்கிய நுண்ணறிவுகளுடன் வீரர்களுக்கு உதவ உள்ளூர் அறிவு கொண்ட ஒருவரைக் கொண்டு வர இயன் பெல்லை பேட்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ளோம். 

இயன் பெல்லிற்கு இங்கிலாந்தில் விளையாடிய அனுபவம் அதிகம், இந்த முக்கியமான சுற்றுப்பயணத்தில் அவரது உள்ளீடு எங்கள் அணிக்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான இயன் பெல் அந்த அணிக்காக 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 22 சதங்கள் மற்றும் 46 அரைசதங்களுடன் 7,727 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News