வெற்றிபெறுவது மிகவும் அவசியமான ஒன்று - தனஞ்செயா டி சில்வா!

Updated: Thu, Aug 29 2024 11:04 IST
Image Source: Google

இலங்கை அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியின் முடிவில் இங்கிலாந்து அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணியானது இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது. 

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று (ஆகஸ்ட் 29) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை வெல்லும் என்பதாலும், இலங்கை அணி வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்யும் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

மேற்கொண்டு இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இப்போட்டியில் விளையாடும் இரு அணியின் பிளேயிங் லெவனும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய இலங்கை அணி கேப்டன் தனஞ்செயா டி சில்வா, இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் வெற்றிபெறுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இதுபோன்ற மைதானங்களில் விளையாடுவது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஒன்றாக இருக்கும். நாங்கள் இங்கு சுற்றுப்பயணம் செய்யும் போது மட்டுமே இதுபோன்ற ஆடுகளங்களில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் பேட்ஸ்மேன்கள் கவுண்டி கிரிக்கெட் தொடரில் விளையாடினால், அது அவர்களுக்கு உதவியாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக, நான் கவுண்டி கிர்க்கெட் ஒப்பந்தத்தைப் பெற விரும்பினேன்.

ஆனால் எனக்கு இதுவரை கிடைக்கவில்லை. இந்தத் தொடரில் என்னால் சிறப்பாகச் செயல்பட முடிந்தால், ஏதாவது ஒரு கவுண்டி அணியில் நான் தேர்ந்தெடுக்கப்படுவேன். கவுண்டி கிரிக்கெட் சீசனில் விளையாட வேண்டும் என்பது எனது கனவாகும். அது இத்தொடரின் மூலம் நடக்கும் என்று நம்புகிறேன். அதேசமயம் நாங்கள் இந்த போட்டியில் வெற்றிபெறுவது எங்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

ஏனெனில் நாங்கள் வெற்றிபெற்றால் மட்டுமே எங்களால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முன்னேற முடியும். இந்த போட்டியில் நாங்கள் வெற்றிபெறுவோம் என அதிக நம்பிக்கையுடன் இருக்கிறோம். ஓல்ட் டிராஃபோர்டிலும் நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம், ஆனால் நாங்கள் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற தவறிவிட்டோம். அதனால் இந்த போட்டியில் எங்கள் திட்டங்களில் தெளிவாக இருக்க வேண்டும் மற்றும் அவற்றை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

Also Read: Funding To Save Test Cricket

மேற்கொண்டு இப்போட்டிக்கான எங்கள் அணியில் பதும் நிஷங்காவை நாங்கள் இணைத்துள்ளது எங்களுக்கு மிகப்பெரும் சாதகாமக அமையும் என நம்புகிறேன். ஏனெனில் தாற்போது எங்கள் நாட்டின் சிறந்த பேட்டராக அவர் உள்ளார். மேலும் அவரிடன் சிறந்த பேட்டிங் திறன் மற்றும் அதற்கான யுக்தியும் உள்ளது. ஆகவே நிச்சயம் அவர் இப்போட்டியில் எங்கள் அணியின் முக்கிய வீரராக இருப்பார் என நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை