ஐபிஎல் 2021: வீரர்களுக்கு அனுமதி வழங்கியது இலங்கை கிரிக்கெட் வாரியம்!
கரோனா தொற்றால் ஒத்திவைக்கப்பட்ட 14ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி, செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அமீரகத்தில் மீண்டும் தொடங்கவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது.
அந்தவகையில் இத்தொடரில் பங்கேற்க முடியாத வீரர்களுக்கான மாற்று வீரர்களையும் ஐபிஎல் அணிகள் ஒப்பந்தம் செய்துவருகின்றனர். இதில் ஆர்சிபி அணி ஆடம் ஸாம்பா மற்றும் டேனியல் சம்ஸிற்கு பதிலாக இலங்கையைச் சேர்ந்த துஷ்மந்தா சமீரா, வாநிந்து ஹசரங்கா ஆகியோரை ஒப்பந்தம் செய்தது.
இந்நிலையில் இலங்கை வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க என்ஓசி எனப்படும் வீரர்களுக்கான அனுமதியை இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்று வழங்கியுள்ளது. இதன் மூலம் நடப்பு சீசனில் இந்த இரு வீரர்களும் ஆர்சிபி அணிக்காக விளையாடுவது உறுதியாகிவிட்டது.
இருப்பினும் இந்த இரு வீரர்களும் நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பார்கள் என்பதால், அக்டோபர் 10ஆம் தேதியில் இலங்கை அணியுடன் இணைய வேண்டும் என்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
ஆனால் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறும் என்பதால், ஒருவேளை ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் தருணத்தில் இவர்களால், அணியில் விளையாட முடியாதது குறிப்பிடத்தக்கது.