இங்கிலாந்து vs இலங்கை, முதல் டெஸ்ட் - போட்டிக்கு முன் இரு அணி கேப்டன்களும் கூறியது என்ன?
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியான்னது இன்று மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இப்போட்டிக்கான இரு அணிகளின் பிளேயிங் லெவனும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய இலங்கை அணி கேப்டன் தனஞ்செயா டி சில்வா, “ஆசிய நாடுகளில் உள்ள நிலைமைகளை காட்டிலும் இங்குள்ள நிலைமைகள் முற்றிலும் வேறுபட்டவை. நாங்கள் சில போட்டிகளில் விளையாட விரும்பினோம், ஆனால் எங்களுக்கு ஒரு போட்டி மட்டுமே கிடைத்தது. மேலும் அதில் நாங்கள் முழு பலத்துடன் விளையாடவில்லை. மாறாக நாங்கள் சில வீரர்களை மட்டுமே முயற்சித்தோம். ஆனால் அதன் முடிவு நாங்கள் எதிர்பார்த்தது போல் செல்லவில்லை. ஆனால் எங்களிடம் போதுமான தயாரிப்பு இருந்ததாக நான் நினைக்கிறேன்.
மேலும் எது எங்களுடைய முதல் போட்டியில் வேலை செய்யும் என்றும் எதிர்பார்க்கிறேன். அதேசமயம் எங்களுக்கு ஏன் மற்றொரு பயிற்சி ஆட்டம் இல்லை என்பது எனக்கு தெரியவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு நாங்கள் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம். ஒருவேளை அது தான் காரணமாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன். மேலும் எங்களிடம் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர், அவர்களுடன் ஒரு உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளரும் இருக்கிறார். அவர் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கினால், ஆட்டத்தில் வெற்றி பெற எங்களுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக உணர்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இப்போட்டி குறித்து பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் ஒல்லி போப், “இங்கிலாந்து கிரிக்கெட்டின் மிகப் பெரிய கவுரவங்களில் ஒன்றான அணியை வழிநடத்தும் பொறுப்பு எனக்கு கிடைத்துள்ளது. இதனை ஒரு சிறந்த வாய்ப்பாக நான் பார்க்கிறேன். ஆனால் அது இன்னும் ஸ்டோக்ஸின் அணிதான் என்று நினைக்கிறேன். ஏனெனில் எங்களின் உடைமாற்று அரையில் எந்தவொரு மாற்றத்தையும் நான் பார்க்கவில்லை. ஏனெனில் அவர் தனது வீரர்களை அவர்களது போக்கில் செயல்பட அனுமதிப்பார். அதுபோல் இத்தொடரிலும் நான் எதிர்பார்ததைப் போல் என்னால் செயல்பட முடியும் என்று நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இலங்கை பிளேயிங் லெவன்: நிஷன் மதுஷ்கா, திமுத் கருணாரத்னே, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமால், தனஞ்சய டி சில்வா (கேப்டன்), கமிந்து மெண்டிஸ், பிரபாத் ஜெயசூர்யா, அசிதா ஃபெர்னாண்டோ, விஷ்வா ஃபெர்னாண்டோ, மிலன் ரத்னாயகே
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: டான் லாரன்ஸ், பென் டக்கெட், ஒல்லி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், மேத்யூ பாட்ஸ், மார்க் வுட், சோயிப் பஷீர்.