இலங்கை vs இந்தியா, மூன்றாவது ஒருநாள் போட்டி - மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு?

Updated: Tue, Aug 06 2024 20:41 IST
Image Source: Google

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி 0-1 என பின்தங்கியுள்ளது. இத்தொடரின் முதல் ஒருநாள் போட்டியில், இந்தியாவின் வெற்றிக்கு கடைசி 14 பந்துகளில் 1 ரன் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் கடைசி பேட்ஸ்மேன் அதை அடிக்க முடியாமல் ஆட்டம் டிராவில் முடிந்தது. அதன்பிறகு, இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் ரோஹித் சர்மா அபாரமாக விளையாடி அரை சதம் விளாசினார், ஆனால் மற்ற வீரர்கள் மீண்டும் ஏமாற்றம் அளித்தனர். அந்த போட்டியில் இந்திய அணி 241 ரன்கள் என்ற இலக்கை துரத்திய போது, ​​ஒட்டுமொத்த அணியும் 208 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனால் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை கொழும்ம்புவில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் இலங்கை 1-0 என முன்னிலையில் இருப்பதால், அழுத்தம் இந்திய அணி மீது உள்ளதால், இப்போட்டியின் மீது அனைவரின் பார்வையும் இருக்கும். இருப்பினும், இந்த போட்டியின் போது மழை இடையூறு இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்திய அணி மற்றும் ரசிகர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

கொழும்புவில் நாளைக்கான வானிலை அறிக்கையின் படி இடியுடன் கூடிய மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேற்கொண்டு காற்றின் வேகம் அதிகரிப்பதுடன்ம் மோகமூட்டமான வானிலையே நிலவும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் நிச்சயம் நாளைய போட்டியானது மழையால் பாதிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை இப்போட்டியானது மழை காரணமாக ரத்து செய்யப்பட்டால், இலங்கை அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியதாக அறிவிக்கப்படும்.

அதேசமயம் டக்வொர்த் லூயிஸ் முறை கடைபிடிக்கப்பட்டு ஆட்டம் நடைபெற்றாலும், அது இந்திய அணி பேட்டர்களுக்கு சற்று சவாலான போட்டியாகவே இது இருக்கும். ஏனெனில், இந்திய அணியின் பேட்டிங்கில் கேப்டன் ரோஹித் சர்மாவைத் தவிர, வேறு எந்த பேட்ஸ்மேனும் அரை சதம் கூட இத்தொடரில் அடிக்கவில்லை. அதனால் இந்திய அணியின் பேட்டிங் துறை மீதும் கடுமையான அழுத்தம் ஏற்பட்டுள்ளது. மேற்கொப்டு இதுபோன்ற சூழ்நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான அணியில் ரோஹித் சர்மா ஏதாவது மாற்றங்களைச் செய்வாரா அல்லது அதே ப்ளேயிங் லெவனுடன் களம் இறங்குவாரா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்திய ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்ஸர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இலங்கை ஒருநாள் அணி: சரித் அசலங்கா (கே), பதும் நிஷங்கா, அவிஷ்க ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனாகே, நிஷான் மதுஷ்க, துனித் வெல்லலாகே, சாமிக்க கருணாரத்ன, அகிலா தனஞ்செயா, மொகம்து ஷிராஸ், மஹீஸ் தீக்ஷனா, அசித்த ஃபெர்னாண்டோ, இஷான் மலிங்கா, ஜெஃப்ரி வண்டர்சே.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை