வங்கதேசத்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்ற இலங்கை!

Updated: Sat, May 29 2021 16:40 IST
Image Source: Google

இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று தாக்காவில் நடந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது. 

இதில் கேப்டன் குசால் பெரேரா, தனஞ்செய டி சில்வா ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிலும் குசால் பெரேரா சதமடித்து அசத்தினார். 

இதனால் 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்களை சேர்த்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக குசால் பெரேரா 120 ரன்களையும், தனஞ்செய டி சில்வா 55 ரன்களையும் சேர்த்தனர்.

இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணிக்கு தொக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் தொடக்க வீரர்கள் தமிம் இக்பால், முகமது நைம், ஷாகிப் அல் ஹசன், முஷ்பிக்கூர் ரஹீம் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

பின்னர் ஜோடி சேர்ந்த மொசடெக் ஹொசைன் - மஹ்மதுல்லா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு நம்பிக்கை அளித்தது. இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினார். 

பின்னர் 51 ரன்களில் மொசடெக் ஹொசைன் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து மஹ்மதுல்லாவும் 53 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். 

இதனால் 42.2 ஓவர்களிலேயே வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இலங்கை அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வங்கதேசத்தை வீத்தியது. 

இலங்கை அணி இப்போட்டியில் வெற்றிபெற காரணமாக இருந்த கேப்டன் குசால் மெண்டிஸ் ஆட்ட நாயகனாகவும், தொடர் முழுதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷ்பிக்கூர் ரஹீம் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை