பிபிஎல் 2024-25 எலிமினேட்டர்: சிட்னி தண்டர் vs மெல்போர்ன் ஸ்டார்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
Sydney Thunder vs Melbourne Stars Dream11 Prediction: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் சிட்னி தண்டர் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி சிட்னியில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நடப்பு பிபிஎல் தொடரில் சிட்னி தண்டர் அணி விளையாடிய 10 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி மற்றும் 2 போட்டி முடிவில்லை என மொத்தம் 12 புள்ளிகளைப் பெற்று குவாலிஃபையர் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியது. அதேசமயம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியானது தொடக்கத்தில் 5 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிய நிலையில், அதன்பின் நடைபெற்ற 5 போட்டிகளிலும் தொடர்ச்சியான வெற்றியைப் பதிவுசெய்து பிளே ஆஃப் சுற்றில் நுழைந்தது. 10 போட்டிகளில் 7 வெற்றி, 2 தோல்வி, ஒரு முடிவில்லை என 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் முதலிடத்தை பிடித்து அசத்தியது. மேற்கொண்டு இத்தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய போட்டில் சிட்னி தண்டர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
ST vs MS, BBL 2024-25: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள்: சிட்னி தண்டர் vs மெல்போர்ன் ஸ்டார்ஸ்
- இடம்: சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி
- நேரம்: ஜனவரி 22, மதியம் 1.45 மணி (இந்திய நேரப்படி)
ST vs MS Pitch Report
இந்த எலிமினேட்டர் சுற்று ஆட்டம் சிட்னியில் நடைபெற இருக்கிறது. இந்த மைதானத்தில் இதுவரை நடந்து முடிந்த 4 போட்டிகளில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அணிகளே 3 முறை வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 140 ரன்களாவும், இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 150 ரன்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
ST vs MS: Head To Head Record
- மோதிய போட்டிகள் - 21
- மெல்போர்ன் ஸ்டார்ஸ் - 10
- சிட்னி தண்டர் - 11
- முடிவில்லை - 00
ST vs MS: Where to Watch?
பிக் பேஷ் லீக் தொடரின் அனைத்து போட்டிகளில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட் ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.
ST vs MS Dream11 Prediction
- விக்கெட் கீப்பர் - சாம் ஹார்பர், சாம் பில்லிங்ஸ்
- பேட்ஸ்மேன்கள் - டேவிட் வார்னர், டான் லாரன்ஸ்
- ஆல்-ரவுண்டர்கள் - கிளென் மேக்ஸ்வெல் (கேப்டன்), மார்கஸ் ஸ்டொய்னிஸ், கிறிஸ் கிரீன்,
- பந்து வீச்சாளர்கள் - மார்க் ஸ்டெக்கெடி, டேனியல் சாம்ஸ், வெஸ் அகர், உசாமா மிர்
Sydney Thunder vs Melbourne Stars Probable Playing XI
Melbourne Stars Probable Playing XI: சாம் ஹார்பர், தாமஸ் ரோஜர்ஸ், டான் லாரன்ஸ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ் (கேப்டன்), ஜோ மெக்கென்சி, ஹில்டன் கார்ட்ரைட், உசாமா மிர், ஜோயல் பாரிஸ், பிராடி கோச், மார்க் ஸ்டெக்கெடி
Sydney Thunder Probable Playing XI : கேமரூன் பான்கிராஃப்ட், டேவிட் வார்னர் (கேப்டன்), ஜேசன் சங்கா, ஒலிவர் டேவிஸ், சாம் பில்லிங்ஸ், மேத்யூ கில்க்ஸ், டான் கிறிஸ்டியன், கிறிஸ் கிரீன், டேனியல் சாம்ஸ், தன்வீர் சங்கா, வெஸ் அகர்
ST vs MS Dream11 Prediction, ST vs MS Dream11 Team, Today Match ST vs MS, BBL 2024-25, Fantasy Cricket Tips, ST vs MS Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match Sydney Thunder vs Melbourne Stars
Also Read: Funding To Save Test Cricket
Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.