ஸ்டார்க் வேகத்தில் சரிந்த விண்டீஸ்; ஆஸி அபார வெற்றி!

Updated: Wed, Jul 21 2021 10:55 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று பார்போடாஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது. இப்போட்டி தொடங்குவதற்கு முன்னர் மழை பெய்ததால் ஆட்டம் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 49 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்களை சேர்த்தது. அந்த அணியில் கேப்டன் அலேக்ஸ் கேரி 67 ரன்களையும், ஆஷ்டன் டர்னர் 49 ரன்களை எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஹெய்டன் வால்ஷ் ஜூனியர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்டார்க், ஹசில்வுட் ஆகியோரின் அபார பந்துவீச்சில் சீட்டுக்கட்டாய் சரிந்தது. அந்த அணியில் கேப்டன் பொல்லார்டைத் தவிர மற்ற வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை. 

இதனால் 26 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசி  அணிக்கு வெற்றியை தேடித்தந்த மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகானத் தேர்வு செய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை