ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக டிரைக் ரேட்டை வைத்திருக்கும் ஐந்து வீரர்கள்!
டெஸ்ட் கிரிக்கெட்டைப் பார்த்து சளித்த ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது தான் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள். அதிலும் குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் என்றாலே அது ஒவ்வொரு நாட்டிற்கு தனி கவுரமாக பார்க்கப்படுகிறது.
அப்படிப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பல முறை அசாத்தியமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது. ரோஹித் சர்மாவின் ருத்ரதாண்டவ இன்னிங்ஸ் முதல் இங்கிலாந்து 481 ரன்களை குவித்தது வரை பல சாதனைகள் ரசிகர்களின் பெரும் வரவேப்பை இப்போட்டிகளுக்கு கொடுத்துள்ளது.
அதன்படி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிரடியாக விளையாடி அதிக ஸ்டிரைக் ரேட்டை வைத்துள்ள ஐந்து வீரர்கள் குறித்து இப்பதிவில் நாம் காண்போம்.
ஒருநாள் போட்டிகளில் அதிக ஸ்டிரைக் ரேட்டைக் கொண்ட வீரர்கள் (குறைந்தது 100 இன்னிங்ஸில்)
கிளென் மேக்ஸ்வேல்
இப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பவர் ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரர் கிளென் மேக்ஸ்வெல் தான். இவர் கடந்த 106 இன்னிங்ஸ்களில் 125.43 ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடியுள்ளர். அதேசமயம் 3,230 ரன்களையும் குவித்துள்ளார்.
ஜோஸ் பட்லர்
இப்பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடிப்பவர் இங்கிலாந்தின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர். இவர் இதுவரை 123 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 118.66 ஸ்டிரைக் ரேட்டுடன் 3,872 ரன்களைக் குவித்துள்ளார். மேலும் சமகாலத்தின் சிறந்த விக்கெட் கீப்பராகவும் வலம் வருவது குறிப்பிடத்தக்கது.
ஷாகித் அஃப்ரிடி
இதில் 3ஆம் இடத்தைப் பிடிப்பது பாகிஸ்தானின் முன்னாள் அதிரடி நாயகன் ஷாகித் அஃப்ரிடி. இவர் 369 இன்னிங்ஸ்களில் விளையாடி 8ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களைக் குவித்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 117ஆக உள்ளது.
திசாரா பெரேரா
இலங்கை அணியின் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவர் திசாரா பெரேரா. சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த இவர் 133 ஒருநாள் இன்னிங்ஸில் 2,338 ரன்களை எடுத்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 112.08 என்பது குறிப்பிடத்தக்கது.
விரேந்திர சேவாக்
இப்பட்டியலின் ஐந்தாம் இடத்தைப் பெறுபவர் இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் விரேந்திர சேவாக் தான். இந்திய அணிக்காக 245 ஒருநாள் இன்னிங்ஸில் விளையாடியுள்ள சேவாக் 8,273 ரன்களை குவித்துள்ளார். இவரது ஸ்டிரைக் ரேட் 104.33 ஆகும். மேலும் இப்பட்டியலில் ஒருநாள் இன்னிங்ஸில் இரட்டை சதம் விளாசிய வீரரும் இவர் தான்.