வில்லியம்சன்னிற்கான மாற்று வீரர் யார்? ஸ்மித்தின் பதில்!

Updated: Sat, Apr 01 2023 19:59 IST
Image Source: Google

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியின் முக்கியமான வீரர் கேல் வில்லியம்சன் விளையாடினார். குஜராத் அணியின் பவுலிங்கின் போது, ருதுராஜ் கெய்க்வாட் அடித்த சிக்சரை பிடிக்க முயன்ற போது, அவரது காலில் காயம் ஏற்பட்டது. மைதானத்தில் இருந்தே மற்ற வீரர்களின் உதவியுடன் தான் கேன் வில்லியம்சன் வெளியேறினார். அதுமட்டுமல்லாமல் குஜராத் அணிக்காக அவர் களமிறக்கப்படவில்லை.

அவருக்கு பதிலாக தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் இம்பேக்ட் பிளேயராக களமிறக்கப்பட்டார். இதனால் கேன் வில்லியம்சனின் காயம் குறித்து கேள்விகள் எழுந்தது. இந்த நிலையில் கேல் வில்லியம்சன் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மொத்தமாக தொடரில் இருந்தே விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் குஜராத் அணி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஏனென்றால் அகமதாபாத் மைதானத்திற்கு ஏற்ப ஆடும் பேட்ஸ்மேன் என்பதாலேயே கேன் வில்லியம்சனை குஜராத் அணி ஏலத்தில் வாங்கியது. ஆனால் அவர் முதல் போட்டியோடு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறுவது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் கேன் வில்லியம்சனுக்கு மாற்று வீரராக யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்தது.

இதனிடையே கேன் வில்லியம்சனுக்கு மாற்று வீரராக ஸ்டீவ் ஸ்மித் ஒப்பந்தம் செய்ய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் குஜராத் அணிக்கு மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு ஸ்டீவ் ஸ்மித் பதில் அளித்துள்ளார். அதில், “நான் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் பதிவு செய்யவில்லை. அதனால் மாற்று வீரராக என்னை ஒப்பந்தம் செய்ய வாய்ப்புகள் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

பொதுவாக ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்துள்ள வீரர்களையே மாற்று வீரர்களாக அணி நிர்வாகங்களால் ஒப்பந்தம் செய்ய முடியும். அதனால் ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்யாத ஸ்டீவ் ஸ்மித் நடப்பு ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக மட்டுமே செயல்படுவார். டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணி பேட்டிங் வரிசையிலேயே ஸ்டீவ் ஸ்மித்திற்கு இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை