மீண்டும் கேப்டனாகிறார் ஸ்டீவ் ஸ்மித் - தகவல்!

Updated: Sun, Nov 21 2021 12:49 IST
Image Source: Google

கடந்த 2017 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது  பந்தை சேதப்படுத்திய காரணத்திற்காக அப்போதைய ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தின் பதவி பறிக்கப்பட்டு டிம் பெயினிடம் வழங்கப்பட்டது. அப்போது இருந்து ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக டிம் பெயின் செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் சக பெண் ஊழியருக்கு தவறான குறுஞ்செய்திகளை அனுப்பியதாக டிம் பெயின்  மீது பாலியல்  புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக  டிம் பெயின்  அறிவித்தார். 

பெண் கிரிக்கெட் ஊழியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது அம்பலமானதால் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து டிம் பெய்ன் விலகியது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய சேர்மன் ரிச்சர்ட் பிரெடென்ஸ்டீன் நேற்று கூறும் போது, ‘இந்த விவகாரம் குறித்து 2018ஆம் ஆண்டு விசாரணை நடத்தப்பட்ட போது டிம் பெய்னின் செயலை ஏற்றுக்கொண்டு தீவிர நடவடிக்கை எடுக்காமல் விட்டது தவறான முன்னுதாரணமாகும். அப்போதே அவரது கேப்டன் பதவியை பறித்திருக்க வேண்டும். ஆஸ்திரேலிய கேப்டன் என்பவர் மிக உயரிய தரத்துடன் இருக்க வேண்டும்’ என்றார்.

இந்த சூழலில் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து டிம் பெய்ன் ஒதுங்கிய நிலையில் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்த கேப்டனுக்கான வாய்ப்பில் துணை கேப்டனான வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் முன்னிலையில் இருக்கிறார். ஆனால் முன்னாள் கேப்டனும், பேட்ஸ்மேனுமான ஸ்டீவன் சுமித்தும் கேப்டனுக்கான போட்டியில் இருப்பது தெரிய வந்துள்ளது. தேர்வாளர்கள் அவரது பெயரையும் கிரிக்கெட் வாரியத்திற்கு பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Also Read: T20 World Cup 2021

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் அடுத்த மாதம் 8-ந் தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. ஆஷஸ் தொடரின் முதல் இரு டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி கடந்த 17ஆம் தேதி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை