இவர்கள் தான் சிஎஸ்கேவின் துருப்புச்சீட்டு - மேத்யூ ஹைடன்!

Updated: Sun, Mar 26 2023 20:11 IST
Image Source: Google

2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர்களுக்கான மினி ஏலத்தில் 16.25 கோடி ரூபாய்க்கு இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி . சிஎஸ்கே அணியால் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் அவர்தான்.உலகின் தலைசிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவரான ஸ்டோக்ஸ் வருங்கால சிஎஸ்கே அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்படலாம் என ஒரு கருத்து நிலவி வருகிறது. 

கடந்த் 2017 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார் பென் ஸ்ட்ரோக்ஸ் . இதுவரை 43 போட்டிகளில் விளையாடி 920 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் இரண்டு சதங்களும் இரண்டு அரை சதங்களும் அடங்கும். பந்துவீச்சின் மூலம் 28 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதில் 2021 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகளின் போது காயம் காரணமாக வெளியேறிய இவர் 2022 ஆம் ஆணடு ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை . இந்நிலையில் அவர் தற்போது சிஎஸ்கே அணிக்காக விளையாட இருக்கிறார். இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரும் சிஎஸ்கே அணியின் முன்னாள் துவக்க வீரர் மேத்யூ ஹைடன் பென் ஸ்டோக்ஸ் பற்றி சமீபத்திய பேட்டியில் தனது கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார். 

இதுகுறித்து பேசிய ஹைடன், “பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் போட்டிகளில் இதுவரை அவர் தனது முழு திறமைக்குமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 43 போட்டிகளில் அவர் ஆடி இருந்தாலும் அவரது திறமைக்கு தகுதியான ஆட்டம் இதுவரை ஐபிஎல் இல் வெளிப்படுத்தவில்லை. ஆனால் சிஎஸ்கே அணிக்கு நிச்சயமாக ஒரு எக்ஸ் பாக்டராக இருப்பார்.

இதுவரை தன்னுடைய திறமைக்கு ஏற்ற ஆட்டத்தை ஐபிஎல் இல் வெளிப்படுத்தவில்லை என்றாலும் அவர் நிச்சயமாக சென்னை அணிக்கு ஆட்டத்தை மாற்றக்கூடிய ஒரு வீரராக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் தோனி மற்றும் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் தான் சிஎஸ்கே அணியின் துருப்புச் சீட்டு.

சென்னை அணிக்கு மிகவும் ஒரு முக்கியமான வீரர் என்றால் அது ரவீந்திர ஜடேஜா தான். அவர் ஒரு தகுதியான ஆல் ரவுண்டர் . சென்னை அணியில் பல கிளாசிக் ஆல்ரவுண்டர்கள் இருந்தாலும் ரவீந்திர ஜடேஜா அவருடைய சிறந்த ஃபார்மில் இருப்பது சென்னை அணிக்கு மிகவும் சிறப்பான விஷயம்” எனக் கூறினார். இந்த சீசனில் சென்னை அணியின் வெற்றியில் ரவீந்திர ஜடேஜாவின் தாக்கம் அதிகமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை