வார்னர், லபுஷாக்னேவை வழியனுப்பிய ஸ்டூவர்ட் பிராட் ; வைரல் காணொளி!

Updated: Sat, Jun 17 2023 20:01 IST
Image Source: Google

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் நேற்று (ஜூன் 16) முதல் தொடங்கியது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் இங்கிலாந்து முதலில் பேட் செய்தது. அந்த அணி தனது முதல் இன்னிங்ஸில் 393 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் அதிகபட்சமாக 118 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். 

இதனையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா நேற்று முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்திருந்தது. டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா களத்தில் இருந்தனர். இந்நிலையில், இன்று (ஜூன் 17) இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஸ்டூவர்ட் பிராட் வீசிய பந்தில் டேவிட் வார்னர் போல்டானார். அவர் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

முதல் பந்தில் வார்னரை ஆட்டமிழக்கச் செய்த ஸ்டூவர்ட் பிராட் அடுத்த பந்தை சந்தித்த மார்னஸ் லபுஷேனை வந்த வேகத்தில் பெவிலியனுக்கு அனுப்பினார். இதனால், ஆஸ்திரேலிய அணி 29 ரன்களுக்கே தனது இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இந்நிலையில் அடுத்தடுத்த பந்துகளில் ஸ்டூவர் பிராட் இக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை