இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை தேர்வு செய்த கவாஸ்கர்!
தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காஅ அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி தொடங்கவுள்ளது.
முதல் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணி, அடுத்த போட்டியிலாவது வெற்றி பெற்றாக வேண்டும் என விரும்பும் முன்னாள் இந்திய வீரர்கள் பலர் இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில், இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தான தனது கருத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து பேசிய சுனில் கவாஸ்கர், “பிளேயிங் லெவனில் பெரிய மாற்றங்கள் செய்ய நான் விரும்பவில்லை. என்னை பொறுத்தவரையில் ஜடேஜா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும். ரவிச்சந்திர அஸ்வினின் பந்துவீச்சு பெரிதாக எடுபடவில்லை. கடந்த போட்டியிலும் அவர் அதிகமான ரன்களை வழங்கினார் என்பதால் அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜாவிற்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்க வேண்டும். அதே போல் பிரசீத் கிருஷ்ணாவிற்கு பதிலாக முகேஷ் குமாருக்கு பிளேயிங் லெவனில் இடம் கொடுக்கலாம். புதிய பந்தில் முகேஷ் குமாரால் சிறப்பாக பந்துவீச முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
கவஸ்கர் தேர்வு செய்த பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், முகேஷ் குமார்.