உலகக் கோப்பையில் இவர்கள் தான் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானவர்கள் - சுனில் கவாஸ்கர்!

Updated: Mon, Aug 21 2023 22:42 IST
Image Source: Google

பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்கி நடைபெற இருக்கும் ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் நாம் வழக்கமாக எதிர்பார்த்த எல்லா வீரர்களுமே இடம் பெற்று இருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் மற்றும் கேஎல்ராகுல் இருவரும்  உடற்தகுதிப்பெற்று அணிக்குத் திரும்பி இருக்கிறார்கள். யுஸ்வேந்திர சஹால் மட்டும் நீக்கப்பட்டு, புதுவீரராக திலக் வர்மாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. 

இந்த அணியில் 18ஆவது வீரராக சஞ்சு சாம்சன் அணி உடன் பயணம் செய்கிறார். கே எல் ராகுலுக்கு காயம் முழுவதுமாக குணமடைந்து இருந்தாலும், கொஞ்சம் நிக்கில் இருப்பதால், ஒருவேளை தொடருக்கு முன் சரியாகாவிட்டால், முன்னெச்சரிக்கையாக சஞ்சு சாம்சன் பயணம் செய்கிறார். ஆசியக் கோப்பை முடிந்து வரும் அக்டோபர் 5ஆம் தேதி இந்திய மண்ணில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் முதல் முறையாக முழுமையாக நடத்தப்படவுள்ளது. 

இந்நிலையில் இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், “பேட்டிங் ஆர்டரில் எந்த அணியும் சிறப்பாக இருக்க வேண்டும். ஆனால் நான் டாப் ஆர்டரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. ரோஹித் சர்மா கீழே விளையாட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. புதிய பந்தில் நிறைய சேதாரங்கள் உருவாகும் பொழுது, அதைக் கட்டுப்படுத்த நமக்கு நான்காம் இடத்தில் விளையாட விராட் கோலி இருக்கிறார். ஒவ்வொரு முறை இந்தியா தோற்ற பொழுதும் புதிய பந்தில் 10 முதல் 12 ஓவரில் முக்கிய விக்கெட்டுகளை இழந்ததால்தான் தோற்று இருக்கிறது.

இந்த நேரங்களில் ஒரே சமயத்தில் ரோஹித் மற்றும் விராட் கோலி இருவரும் தங்கள் விக்கெட்டை கொடுத்து இருக்கிறார்கள். எனவே சூழ்நிலையை பொறுத்து இதில் நாம் மாற்றங்களை செய்து கொள்ளலாம். ரோஹித் மற்றும் விராட் கோலி தொடர்ந்து பந்து வீசி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். சாம்பியன்ஷிப் வென்ற அணிகளை எடுத்து பார்க்கும் பொழுது, பேட்டிங்கில் மேல் வரிசையில் இருப்பவர்கள் பந்தும் வீசக்கூடியவர்களாக இருப்பதை காணலாம்.

இந்தியாவிற்கு பேட்டிங்கும் செய்து பந்து வீசக்கூடியவர்கள் ஆறு மற்றும் ஏழாவது இடங்களில் தான் இருக்கிறார்கள். இவர்கள் ஆறு ஏழு ஓவர்கள் பந்து வீசி, விக்கட்டையும் கைப்பற்றி அணிக்கு ரன்களையும் கொடுப்பதாக இருந்தால் அது மிகச் சிறப்பாக இருக்கும். அப்படியானால் ஆல்ரவுண்டர்கள்தான் மிகவும் முக்கியமானவர்களாக இருப்பார்கள்.  இந்த இடத்தில் ஹர்திக் பாண்டியா ரவீந்திர ஜடேஜா உடன் இணைந்து ஆட்டத்தை மாற்றக்கூடிய வீரர்.

இந்த இரண்டு பேரும்தான் இந்த உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானவர்கள். உங்களிடம் ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்றவர்கள் ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் இருப்பதுமிகவும் சிறப்பானது. இவர்கள் பினிஷர்களாகவும் இருக்க முடியும். எனவே இது மிகவும் நல்ல அணி என்று நான் நினைக்கிறேன். இவர்களை கொண்ட அணியை தேர்வு செய்ததற்கு தேர்வு குழுவுக்கு எனது பாராட்டுக்கள்” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை