நரைன் இல்லாதது பேரிழப்பு தான் - கீரேன் பொல்லார்ட்!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் மாயாஜால சுழற்பந்துவீச்சாளார் சுனில் நரைன். இவர் சமீபத்தில் நடந்துமுடிந்த ஐபிஎல், சிபிஎல் உள்ளிட்ட தொடர்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதனால் நிச்சயம் இவர் வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அவருக்கான வாய்ப்பை வெஸ்ட் இண்டீஸ் அணி தேர்வாளர்கள் வழங்கவில்லை.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை அணியில் நரைன் இல்லாதது பற்றி பேசிய கேப்டன் பொல்லார்ட், “சுனில் நரைனைப் பொறுத்தவரை அவர் அணியில் இல்லாதது இழப்புதான். ஐபிஎல், சிபில் என டி20 கிரிக்கெட்டில் அவருடைய பங்களிப்பை யாராலும் மறக்க முடியாது.
டி20 கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர். எனவே அவர் அணியில் இல்லாதது பெரிய இழப்பு என ஒப்புக்கொள்கிறோம். அவர் அணியில் இருந்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறோம். இந்த நேரத்தில் அது துரதிர்ஷ்டவசமானதுதான்.
Also Read: டி20 உலகக் கோப்பை 2021
வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த நரைன் உலகம் முழுக்க விளையாடி வருகிறார். அவர் இல்லாத குறையை ஏற்றுக்கொண்டு அடுத்தக்கட்டத்துக்கு நகரவேண்டும். அணியில் உள்ள 15 வீரர்களைக் கொண்டு திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற வேண்டும்” என்று தெரிவித்தார்.