ஐபிஎல் 2021: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் -போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Sun, Sep 26 2021 16:31 IST
Image Source: Google

ஐபிஎல் 14ஆவது சீசனில் நாளை நடைபெறும் 40ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

முன்னதாக நடப்பு சீசனில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்று அசத்தியது. மேலும் ஹைதராபாத் அணி நடப்பு சிசன் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளதால், இப்போட்டியின் சுவாரஸ்யம் சற்று குறைந்துள்ளது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் -சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
  • இடம் - துபாய் சர்வதேச மைதானம், துபாய்
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம் 

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 9 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

அதிலும் டெல்லி அணியுடனான தோல்வியின் காரணமாக, அந்த அணி இனிவரும் போட்டிகளில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

அதேசமயம் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடப்பு சீசனில் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளது. 

அதிலும் அணியின் நட்சத்திர வீரர்கள் வார்னர், வில்லியம்சன், மனீஷ் பாண்டே என அனைவரும் தொடர்ந்து சொதப்பிய காரணத்தில் அந்த அணி இந்த சீசனில் படுமோசமான ஆட்டத்தை வளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நேருக்கு நேர் 

  • மோதிய ஆட்டங்கள் -14
  • ராஜஸ்தான் வெற்றி - 7
  • ஹைதராபாத் வெற்றி - 7

உத்தேச அணி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டேவிட் வார்னர்/ ஜேசன் ராய், விருத்திமான் சாஹா/ ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, கேன் வில்லியம்சன் (கே), மணீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, கலீல் அகமது.

ராஜஸ்தான் ராயல்ஸ் - யஷாஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கே), லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மில்லர்/ எவின் லூயிஸ்/ கிளென் பிலிப்ஸ், மஹிபால் லமோர், ரியான் பராக்/ மனன் வோரா, ராகுல் திவேட்டியா, கார்த்திக் தியாகி, சேத்தன் சகாரியா, முஸ்தாபிசூர் ரஹ்மான், தப்ரைஸ் ஷம்ஸி.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - சஞ்சு சாம்சன்
  • பேட்டர்ஸ் - யஷாஸ்வி ஜெய்ஸ்வால், லியாம் லிவிங்ஸ்டன், மஹிபால் லமோர், அப்துல் சமத், கேன் வில்லியம்சன்
  • ஆல் -ரவுண்டர்கள் - ஜேசன் ஹோல்டர்
  • பந்து வீச்சாளர்கள் - தப்ரைஸ் ஷம்சி, முஸ்தபிசுர் ரஹ்மான், ரஷித் கான், புவனேஸ்வர் குமார்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை