எஸ்ஏ20 2024: பார்ல் ராயல்ஸை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் த்ரில் வெற்றி!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்த எஸ்ஏ20 லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த பார்ல் ராயல்ஸ் அணிக்கு ஜேசன் ராய் - ஜோஸ் பட்லர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜேசன் ராய் 8 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் ஜோஸ் பட்லரும் 38 ரன்களில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வான் பியூரன் 14 ரன்களுக்கும், கேப்டன் டேவிட் மில்லர் 11 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்ன இணைந்த டேன் விலாஸ் - விஹான் லூப் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் லூப் 27 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் 34 ரன்கள் எடுத்திருந்த டேன் விலாஸும் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, பார்ல் ராயல்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து இல்லை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு ஜோர்டன் ஹார்மன் - டேவிட் மாலன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜோர்டன் ஹார்மன் 21 ரன்களில் விக்கெட்டை இழக்க, 19 ரன்களில் டேவிட் மாலனும் ஆட்டமிழந்தார்.
அதன்பின் இணைந்த பவுமா - கேப்டன் மார்க்ரம் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதி ஐடன் மார்க்ரம் 37 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸும் 19 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டெம்பா பவுமா 30 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
இப்பினும் அடுத்து களமிறங்கிய பேட்ரிக் குருகர் 7 பந்துகளில் ஒரு பவுண்டரி, 3 சிக்சர்கள் என 26 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பாதிவுசெய்து அசத்தியது.