ரிஷப் பந்தின் பங்களிப்பு மிகவும் முக்கியம் - சுரேஷ் ரெய்னா!

Updated: Sat, Oct 15 2022 08:25 IST
Suresh Raina bats for Rishabh Pant, says presence of the left-hander with Hardik Pandya could be X-f (Image Source: Google)

நாளை மறுநாள் (அக். 16) முதல் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ளது. உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவிற்கு சென்று விட்டனர். தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி எதிர்கொள்கிறது. 

இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகினார். அதனால் இடதுகை பேட்ஸ்மேன்களில் ரிஷப் பந்தின் பங்களிப்பு இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது குறித்து பேசியுள்ள சுரேஷ் ரெய்னா, “இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் இடதுகை பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம். இந்திய அணியில் முதல் 6 பேட்ஸ்மேன்களில் இடதுகை பேட்ஸ்மேன்கள் இல்லை. ஆனால், எதிரணியில் கண்டிப்பாக முதல் 6 பேரில் 2 அல்லது 3 பேர் இடதுகை பேட்ஸ்மேன்களாக இருப்பார்கள். 

இந்திய அணியில் 2007ஆம் ஆண்டு மற்றும் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகள் மற்றும் 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிரோபி போட்டிகளில் கௌதம் கம்பீர், யுவராஜ் சிங் மற்றும் என்னைப் போன்ற இடதுகை பேட்ஸ்மேன்கள் இருந்தோம். அதேபோல ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பைப் போட்டியில் இடதுகை பேட்ஸ்மேனான ரிஷப் பந்தின் பங்களிப்பு மிகவும் முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பெற வேண்டுமா அல்லது ரிஷப் பந்த் இடம் பெற வேண்டுமா என்ற கேள்விக்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா இவ்வாறு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை