மீண்டும் விளையாட வாய்ப்பு கிடைத்தால் இந்த அணியில் சேர விரும்புகிறேன் - சுரேஷ் ரெய்னா!

Updated: Sat, May 10 2025 21:15 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான போர் பதற்றம் காரணமாக இத்தொடரில் எஞ்சியிருந்த போட்டிகளை ஒருவாரம் ஒத்திவைப்பதாக பிசிசிஐ தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பானது நேற்று வெளியானது.

இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளை அடுத்த வாரம் முதல் தொடகும் வேலைகளில் பிசிசிஐ இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் வீரர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் போட்டிகளை தென் இந்தியாவில் மட்டும் நடத்தலாம் என்று பிசிசிஐ ஆலோசித்து வருவதாகவும், எஞ்சிய போட்டிகளுக்கான மறு அட்டவணையை பிசிசிஐ கூடிய விரைவில் அறிவிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா பாட் காஸ்ட் நிகழ்ச்சில் ஒன்றில் பங்கேற்ற போது, அதில் அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையே ஒரு அணியைத் தேர்ந்தெடுத்து, மீண்டும் ஐபிஎல் விளையாட வாய்ப்பு கிடைத்தால் எந்த அணியில் சேர விரும்புகிறேன் என்ற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். மேலும் அவரின் பதிலைக் கேட்ட பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். 

இதுகுறித்து பேசிய அவர், எனக்கு மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தா நான் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட விரும்புகிறேன்.  ஏனென்றால் நான் தெற்கில் விளையாடியுள்ளேன், இப்போது மேற்கே விளையாட விரும்புகிறேன். நான் மும்பை அணிக்காக விளையாட விரும்புகிறேன், ரோஹித்தும் நானும் ஒன்றாக பேட்டிங் செய்வதை கற்பனை செய்து பாருங்கள். நான் வான்கடே மைதானத்தில் 8 போட்டிகளில் விளையாட விரும்புகிறேன்.

இந்த அணியில் ரோஹித் மற்றும் சச்சின் டெண்டுல்கர் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள், நான் 3ஆவது இடத்தில் விளையாடுவேன். பின்னர் பொல்லார்ட் இறங்குவார், மேலும் டுவைன் பிரேவோ, ஹர்பஜன் சிங், ஆஷீஷ் நெஹ்ரா மற்றும் ஜாகீர் கான் உள்ளிட்டோரும் இருப்பார்கள். இது மிகச்சிறந்த அணியாக இருக்கும் என்று நம்புகிறேன். அப்படிப்பட்ட ஒரு அணியை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: LIVE Cricket Score

தற்போது 38 வயதான சுரேஷ் ரெய்னாவின் ஐபிஎல் தொடரில் 205 போட்டிகளில் விளையாடி பேட்டிங்கில் ஒரு சதம், 39 அரைசதங்களுடன் 5528 ரன்களையும், பந்துவீச்சில் 25 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் இவரின் சதனைகளுக்காக ரசிகர்கள் இவரை மிஸ்டார் ஐபிஎல் என்றும் அழைப்பதுண்டு. ஆனால் இவர் கடைசி ஐபிஎல் தொடரில் 2022ஆண்டு விளையாடிய நிலையில், அத்தொடருடன் தனது ஓய்வையும் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை