தனது பயோ பிக்கில் இவர்கள் நடித்தால் சிறப்பாக இருக்கும் - இயக்குநர்களுக்கு ஐடியா கொடுத்த சின்ன தல..!

Updated: Sat, Jun 26 2021 11:27 IST
Image Source: Google

இந்திய சினிமாவில் மேரி கோம், தோனி, சாய்னா நேவால், மில்கா சிங் என விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. இதனால் பல இயக்குநர்கள் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படத்தை இயக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் 'மிஸ்டர் ஐபிஎல்' சுரேஷ் ரெய்னா நேற்று சிஎஸ்கே அணியுடனான இன்ஸ்டாகிராம் நேரலை நேர்காணலில் கலந்துரையாடினார். இதை சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பாக விளையாட்டு நிகழ்ச்சி தொகுப்பாளினி பாவனா தொகுத்து வழங்கினார். 

இந்த கலந்துரையாடலின் போது பாவனா, ரெய்னாவிடம் உங்களுடைய பயோபிக் எடுக்கப்பட்டால் அதில் யார் நடிக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள் என கேள்வியெழுப்பினார்.

இந்த கேள்விக்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா, "சென்னைக்கும் எனக்குமான தொடர்பு அனைவருக்கும் தெரியும். சென்னை எனக்கு இரண்டாவது வீடு போன்றது. எனது வால்க்கை வரலாறு படுமாக எடுக்கப்பட்டால், அதில் நிச்சயம் தென்னிந்திய நடிகர்கள் ரெய்னா கதாபாத்திரத்தை ஏற்கவேண்டும். அதிலும் குறிப்பாக சூர்யா நடித்தால் சிறப்பாக இருக்கும். அவரால் என்னுடைய கதாபாத்திரத்தை சரியாக செய்ய முடியும். அதே போன்று துல்கர் சல்மானும் நடித்தால் நன்றாக இருக்கும்" தனது தேர்வை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா 'Believe: What Life and Cricket Taught Me' என்னும் தனது சுயசரிதை புத்தகத்தை எழுதி, சமீபத்தில் அதனை வெளியிட்டிருந்தார். அந்தப் புத்தகத்தில், சுரேஷ் ரெய்னாவின் கிரிக்கெட் பயணம் குறித்த தகவல்களும், தனிப்பட்ட வாழ்வில் நடைபெற்ற சுவாரஸ்ய நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை