ஐபிஎல் 2023: சூர்யகுமார், ராணா, ஷோகீனுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

Updated: Mon, Apr 17 2023 13:23 IST
Image Source: Google

மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி வன்கடே மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து 185 ரன்கள் அடித்தது. இதனை 17.4 ஓவர்களில் சேஸ் செய்து ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. போட்டிக்கு முன்னர் வயிற்றில் அசவுரிகரியமாக இருப்பதால் ரோஹித் சர்மா களமிறங்கவில்லை. தற்காலிக கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டு இருந்தார். அணியை போட்டி முழுவதும் வழி நடத்தினார்.

இருப்பினும், இப்போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை என்பதால் ஐபிஎல் நிர்வாகம் சூர்யகுமார் யாதவிற்கு அபராதம் விதித்திருக்கிறது. முதல்முறையாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டன் பொறுப்பில் விளையாடினார் சூரியகுமார் யாதவ். இவருக்காக இப்படி நடக்க வேண்டும் என்று பலரும் கமெண்ட் அடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் போட்டியின் நடுவே கேகேஆர் அணி கேப்டன் நிதிஷ் ராணா விக்கெட்டை மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர் ஹிருத்திக் ஷோகின் எடுத்தார். அப்போது ஹிருத்திக் செய்த சில செய்கைகள் நிதிஷ் ராணாவை கோபமடைய செய்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்து ராணா சண்டைக்கு சென்றதால், இருவருக்கும் இடையே கிட்டத்தட்ட கைகளப்பு நேரும் அளவிற்கு மைதானத்தில் சலசலப்பு நிகழ்ந்தது.

பின்னர் நிதிஷ் ராணாவை சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து தடுத்து ஆறுதல் சொல்லி வெளியே அனுப்பி கொண்டிருந்தார். மற்ற வீரர்கள் ஹிருத்திக் ஷோகினை தடுத்து வந்தனர். இந்த சம்பவம் முற்றிலும் ஒழுக்கக்கேடானது என்று கண்டனம் தெரிவித்துள்ள ஐபிஎல் நிர்வாகம், நிதிஷ் ராணாவிற்கு போட்டி கட்டணத்திலிருந்து 25% அபராதமும், ஹிருத்திக் சோக்கினுக்கு போட்டி கட்டணத்திலிருந்து 10% அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.

நித்திஷ்ரானா ஒரு அணியின் கேப்டனாக இருக்கிறார். அவருக்கு பொறுமை மற்றும் போட்டியின் கண்ணியம் கடைபிடிப்பது மிகவும் முக்கியம். அதை செய்யத் தவறியதால் ராணாவிற்கு கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது என்றும் ஐபிஎல் தரப்பிலிருந்து விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை