டெம்பா பவுமாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

Updated: Thu, May 22 2025 14:18 IST
Image Source: Google

மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது 59 ரன்கள் வித்தியாசத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. 

இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தோல்வியைத் தழுவியதன் மூலம் ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் இழந்துள்ளது. மேற்கொண்டு இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார். 

இந்நிலையில் இப்போட்டியின் மூலம் சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் டெம்பா பவுமாவின் சாதனையை முறியடித்துள்ளார். அதன்படி இது டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 25+ ரன்கள் எடுத்த உலக சாதனையை சூர்யகுமார் யாதவ் சமன்செய்துள்ளார். முன்னதாக தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா 2019-20ஆம் ஆண்டி தொடர்ச்சியாக 13 முறை 25+ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்த நிலையில், அதனைத் தற்போது சூர்யகுமார் யாதவ் சமன்செய்து அசத்தியுள்ளார். 

டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 25+ ரன்கள் எடுத்த வீரர்கள்:

  • டெம்பா பாபுமா – 13 (2019-20)
  • சூர்யகுமார் யாதவ் – 13 (2025)
  • பிராட் ஹாட்ஜ் – 11
  • ஜாக் ருடால்ப் – 11
  • குமார் சங்கக்கார – 11
  • கிறிஸ் லின் – 11
  • கைல் மேயர்ஸ் – 11

அதுமட்டுமின்றி, ஒரு ஐபிஎல் சீசனில் அதிகபட்சமாக 25+ ஸ்கோர்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் கேன் வில்லியம்சன் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோரின் சாதனையையும் சூர்யகுமார் யாதவ் சமன் செய்துள்ளார். முன்னதாக கேன் வில்லியம்சன் கடந்த 2018ஆம் ஆண்டும், ஷுப்மன் கில் கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனிலும் தலா 13 முறை 25+ ரன்களைச் சேர்த்திருந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் அதனை சமன்செய்துள்ளார். 

ஒரு ஐபிஎல் சீசனில் அதிக 25+ ஸ்கோர்கள்:

  • கேன் வில்லியம்சன் - 13 இன்னிங்ஸ் (SRH, 2018)
  • ஷுப்மான் கில் - 13 இன்னிங்ஸ் (GT, 2023)
  • சூர்யகுமார் யாதவ் – 13 இன்னிங்ஸ் (MI, 2025)
  • விராட் கோலி - 12 இன்னிங்ஸ் (RCB, 2016)
  • டேவிட் வார்னர் - 12 இன்னிங்ஸ் (SRH, 2016)

இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா 5 ரன்னிலும், ரியான் ரிக்கெல்டன் 25 ரன்னிலும், வில் ஜேக்ஸ் 21 ரன்னிலும், திலக் வர்மா 27 ரன்னிலும் ஆட்டமிழக்க, இறுதிவரை களத்தில் இருந்த சூர்யகுமார் யாதவ் 73 ரன்களையும், நமந்தீர் 24 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களைச் சேர்த்தது.

Also Read: LIVE Cricket Score

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் சமீர் ரிஸ்வி 39 ரன்களையும், விப்ராஜ் நிகம் 20 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யேரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்கவில்லை. இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 121 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை