IND vs NZ: ராகுலுக்கு மாற்றாக சூர்யகுமார் சேர்ப்பு!

Updated: Tue, Nov 23 2021 17:16 IST
Suryakumar Yadav has replaced KL Rahul in India’s squad for the Tests against New Zealand
Image Source: Google

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 

இதில் சமீபத்தில் நடந்து முடிந்த டி20 தொடரை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி, நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்தது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் கான்பூரில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இடது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக கே.எல். ராகுல் முதல் டெஸ்டிலிருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. 

இதையடுத்து அவருக்கு மாற்று வீரராக சூர்யகுமார் யாதவ், இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்துக்குத் தயாராகும் வகையில் பெங்களூரில் உள்ள என்.சி.ஏ.வில் கே.எல். ராகுல் சிகிச்சை பெற்று காயத்திலிருந்து விரைவில் குணமடைவார் என்றும் பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது. 

இந்த மாற்றம் காரணமாக டெஸ்ட் தொடரில் மயங்க் அகர்வாலும் சுப்மன் கில்லும் தொடக்க வீரர்களாகக் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை