ஐபிஎல் 2024: முதல் சில ஆட்டங்களை தவறவிடும் சூர்யகுமார் யாதவ்!

Updated: Tue, Mar 12 2024 12:18 IST
ஐபிஎல் 2024: முதல் சில ஆட்டங்களை தவறவிடும் சூர்யகுமார் யாதவ்! (Image Source: Google)

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இத்தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பை பெறுவார்கள் என்பதால், இத்தொடர் மீது கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரின் போது காயமடைந்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ், அதன்பின் தனது காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தார். இதையடுத்து அவர் அடுத்ததாக நடைபெற்ற ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரிலிருந்தும் விலகினார். இதையடுத்து அவர் எப்போது மீண்டும் கிரிக்கெட் விளையாடுவார் என்ற கேள்வி எழுந்தது. அதன்பின் அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிவரும் சூர்யகுமார் யாதவ் அந்த அணியின் வெற்றிக்கு மிகமுக்கிய காரணமாக இருந்து வருகிறது. இந்நிலையில் காயத்திலிருந்து மீண்டும் சூர்யகுமார் யாதவ் முழுமையான உடற்தகுதியை எட்டாததால், ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளில்  விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் முதல் சில போட்டிகளில் விளையாடாதது அந்த அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஐபிஎல் தொடரில் இதுவரை 139 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ், ஒரு சதம், 21 அரைசதங்கள் என 3249 ரன்களைச் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் ஆட்டம் மார்ச் 24ஆம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அதன்பின் மார்ச் 27ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியையும் எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை