எந்த களத்தில் விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல - சூர்யகுமார் யாதவ்!

Updated: Tue, Jan 31 2023 21:54 IST
Suryakumar Yadav laughs off Hardik Pandya's 'shocker of a pitch' comment! (Image Source: Google)

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடந்துள்ள 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளன. இந்த தொடரின் மீதான பரபரப்பை விட, பிட்ச்-ல் குளறுபடி நடந்ததா என்ற பேச்சு தான் பரபரப்பாக உள்ளது. இதற்கெல்லாம் காரணம் கேப்டன் ஹர்திக் பாண்டியா வைத்த குற்றச்சாட்டு தான்.

அதாவது முதல் டி20ல் யாரும் எதிர்பார்க்காத வகையில் 2வது இன்னிங்ஸில் பிட்ச்-ல் அதிக ஸ்பின் இருந்தது. 2வது டி20 ஒருபடி மேல் சென்று 2 இன்னிங்ஸ்களிலும் ஏகபோகத்திற்கு ஸ்பின் இருந்தது. மொத்தமுள்ள 40 ஓவர்களில் 30 ஓவர்களை ஸ்பின்னர்கள் மட்டுமே வீசினர். இதில் ஒரு சிக்ஸர்கள் கூட செல்லவில்லை. குறிப்பாக 100 ரன்களை மட்டுமே இலக்காக வைத்து, அதையும் இந்தியா தடுமாறி எட்டியது.

இதுகுறித்து பேசியிருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா, “2 டி20க்களிலும் ஏற்படுத்தப்பட்ட பிட்ச்-கள் அதிர்ச்சியை தந்தன. இவை டி20க்கு ஏற்ற களங்களே கிடையாது. பிட்ச் குரேட்டர் கடைசி நேரத்தில் மாற்றங்களை செய்தால் இப்படி தான்” ஆகும் என விளாசியிருந்தார். நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னரும் தோல்விக்கு காரணமாக இதையே தான் கூறினார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து துணைக்கேப்டன் சூர்யகுமார் பேசியுள்ளார். அதில், “எந்த களத்தில் விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல. அது நமது கட்டுப்பாட்டில் இல்லை. இருக்கின்ற பிட்ச்-ல் நம்மால் என்ன செய்யமுடியுமோ அது தான் நமது கையில் இருக்கும். எப்படி அந்த களத்திற்கு ஏற்றார் போல செயல்பட்டு, இரு அணிகளும் மோதுகின்றன. சுவாரஸ்யமாக இருப்பது மட்டுமே முக்கியமாகும்.

போட்டி என்று வந்துவிட்டால், சவால்களை ஏற்றுக்கொண்டு முடிந்தவரை போராட வேண்டும் அவ்வளவு தான். பாண்டியா குற்றச்சாட்டை வைத்த பின்னர், நாங்கள் இருவரும் பேசிக்கொண்டோம். இனி எதிர்காலத்தில் இதுபோன்று வந்தால் எப்படி சமாளிப்பது என்று மட்டும் தான் யோசித்தோம், மற்றபடி எந்த பிரச்சினையும் இல்லை” என கூறியுள்ளார்.

இதுஒருபுறம் இருக்க, ஹர்திக் பாண்டியாவின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட பிசிசிஐ, சம்பந்தப்பட்ட பிட்ச் வடிவமைப்பாளரை பணி நீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஆனால் போட்டி நடைபெறுவதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக இந்திய நிர்வாகம் தான் பிட்ச்-ஐ சூழலுக்கு ஏற்றவாறு மாற்றுமாறு கேட்டதாக அந்த அதிகாரி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை