டி20 தரவரிசை: முதலிடத்தில் நீடிக்கும் சூர்யகுமார் யாதவ்!

Updated: Wed, Feb 01 2023 16:23 IST
Image Source: Google

சர்வதேச டி20 போட்டிகளின் தரவரிசை பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் சூர்யகுமார் யாதவ், இதற்குமுன் 908 புள்ளிகள் பெற்றிருந்தார். நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டி20 போட்டிகள் முடிந்த பிறகு தற்போது 910 புள்ளிகள் பெற்று இருக்கிறார்.

இது இவரது தனிப்பட்ட அதிகபட்சமாகும். இந்திய வீரர்கள் மத்தியில் அதிகபட்சமாகவும் இருக்கிறது. அதேபோல் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் இரண்டாவது அதிகபட்சமாக இருக்கிறது.

முதல் இடத்தில் 915 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணியின் டேவிட் மலான் இருக்கிறார். அவரை முறியடிக்க இன்னும் 6 புள்ளிகள் மட்டுமே சூரியகுமார் யாதவிற்கு தேவைப்படுகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு சூரியகுமார் யாதவிற்கு ஒரு கனவு ஆண்டாகவே அமைந்தது என்று சொல்லலாம். 31 டி20 போட்டிகள் விளையாடி 1164 ரன்கள் விளாசினார். இதில் ஒன்பது அரைசதங்கள் மற்றும் இரண்டு சதங்கள் அடங்கும். ஆயிரம் ரன்கள் அடித்த சூர்யகுமார், அதை 188 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருப்பது இன்னும் சிறப்பான ஒன்று. மேலும் இவரது சராசரி கிட்டத்தட்ட 47 ஆகும்.

ஆசியக்கோப்பை, டி20 உலக கோப்பை என முக்கியமான தொடர்களில் அசத்தினார். இந்நிலையில் ஐசிசி வழங்கும் 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த டி20 வீரராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

2023 ஆம் ஆண்டை இலங்கை அணியுடனான தொடரில் சதம் மற்றும் அரைசதத்துடன் தொடங்கினார். தற்போது நியூசிலாந்து தொடரின் இரண்டாவது டி20 போட்டியில் நிதானமாக விளையாடி ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். 2022 ஆம் ஆண்டு இருந்த ஃபார்மை மீண்டும் இவர் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை