சையத் முஷ்டாக் அலி: காலிறுதியில் கர்நாடகா, கேரளா!
இந்தியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் நடப்பு சீசன் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.
இதில் நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் கர்நாடகா அணி, சௌராஷ்டிரா அணியை எதிர்கொன்டது. இதில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய சௌராஷ்டிரா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஜேக்ஷன் 50 ரன்களைச் சேர்த்தார். அதன்பின் இலக்கைத் துரத்திய கர்நாடகா அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இருப்பினும் அபிநவ் மனோகர் மட்டும் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன், அணியை வெற்றிக்கும் அழைத்துச் சென்றார். இதன்மூலம் 19.5 ஓவர்களில் கர்நாடகா அணி இலக்கை எட்டி, 2 விக்கெட் வித்தியாசத்தில் சௌராஷ்டிரா அணியை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
நேற்று நடைபெற்ற மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் கேரள அணி, ஹிமாச்சல பிரதேசம் அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஹிமாச்சல் அணி 20 ஓவர்களில் 145 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ராகவ் தவான் 65 ரன்களைச் சேர்த்தார்.
Also Read: T20 World Cup 2021
இதையடுத்து இலக்கைத் துரத்திய கேரள அணி முகமது அசாரூதின் - சஞ்சு சாம்சனின் அபாரமான அரைசதத்தினால் 19.3 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹிமாச்சல பிரதேச அணியை வீழ்த்தியது.