டி20 உலகக்கோப்பை: அதிரடியில் மிரட்டிய ஆஃப்கான்; ஸ்காட்லாந்துக்கு 191 ரன்கள் இலக்கு!
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்றுவரும் 17ஆவது லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் - ஸ்காட்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஹஸ்ரதுல்லா ஸஸாய் - முகமது ஷசாத் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து.
இதில் ஷசாத் 22 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹஸ்ரதுல்லா ஸஸாய் 44 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த நஜிபுல்லா ஸத்ரான் - ரஹ்மனுல்லா குர்பஸ் இணை அதிரடி ஆட்டத்தில் மிரட்டியது. இந்த அணி எதிரணி பந்துவீச்சை பவுண்டரிகளாக விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
இதில் ரஹ்மனுல்லா குர்பஸ் 46 ரன்னில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த நஜிபுல்லா ஸத்ரான் அரைசதம் கடந்து அசத்தினார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 190 ரன்களைச் சேர்த்தது.
Also Read: டி20 உலகக் கோப்பை 2021
இதில் அதிகபட்சமாக நஜிபுல்லா ஸத்ரான் 59 ரன்களையும், ரஹ்மனுல்லா குர்பர் 46 ரன்களையும் சேர்த்தனர்.