டி20 உலகக்கோப்பை: ஒற்றை ஆளாய் போராடிய ஃபிஞ்ச்; இங்கிலாந்துக்கு 126 ரன்கள் இலக்கு!
டி20 உலகக்கோப்பை தொடரில் துபாயில் நடைபெற்றுவரும் 26ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். அதாவது அஸி அணியின் டேவிட் வார்னர், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோரை ஒற்றை இலக்கத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி வெளியேற்றினர்.
அதன்பின் கேப்டன் ஃபிஞ்சுடன் ஜோடி சேர்ந்த மேத்யூ வேட் அதிரடியாக விளையாடி முயற்சித்து 18 ரன்களுடனும், அடுத்து வந்த ஆஷ்டன் அகர் தனது பங்கிற்கு 2 சிக்சர்களை விளாசி 20 ரன்களுடனும் நடையைக் கட்டினர்.
இதையடுத்து அதிரடியாக விளையாடி ஆரோன் ஃபிஞ்ச் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 44 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். மறுமுனையில் இரு சிக்சர்களை விளாசியிருந்த பாட் கம்மின்ஸும் போல்டாகி வெளியேறினார்.
இறுதியில் மிட்செல் ஸ்டார்க் சில பவுண்டரிகளை விளாசி ஸ்கோரை உயர்த்தினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களைச் சேர்த்தது.
Also Read: T20 World Cup 2021
ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஆரோன் ஃபிஞ்ச் 44 ரன்களைச் சேர்த்தார். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.