டி20 உலகக்கோப்பை: சீட்டுக்கட்டாய் சரிந்த விக்கெட்டுகள்; இந்தியாவை சுருட்டியது நியூசிலாந்து!
டி20 உலகக்கோப்பை தொடரின் 28ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷான் - கேஎல்ரகுல் இணை களமிறங்கியது. இதில் இஷான் 4 ரன்களில் ஆட்டமிழக்க, கேஎல் ராகுலும் 18 ரன்களோடு வெளியேறினார்.
இதையடுத்து களமிறங்கிய ரோஹித் சர்மா, கேப்டன் விராட் கோலி, ரிஷப் பந்த் என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் இந்திய அணி 100 ரன்களை எட்டுமா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
அதன்பின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியாவும் 23 ரன்களில் ட்ரெண்ட் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியில் ரவீந்திர ஜடேஜா சில பவுண்டரிகளை அடுத்து சற்று நிம்மதியளித்தார்.
Also Read: T20 World Cup 2021
இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும், இஷ் சோதி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.