டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றின் கடைசி லீக் ஆட்டம் இன்று நடைபெற்றுவருகிறது. இதில் இந்தியா - நமீபியா அணிகள் விளையாடிவருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
Advertisement
அதன்படி களமிறங்கிய நமீபியா அணியின் தொடக்க வீரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதன்பின் ஸ்டீபன் பிராட் 21 ரன்னிலும், லிங்கேன் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
Advertisement
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய நமீபியா வீரர்கள் அஸ்வின், ஜடேஜா ஆகியோரது பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
Also Read: T20 World Cup 2021
இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களைச் சேர்த்தது. இதில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா இணை தலா 3 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.