இறுதி போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுவதை விரும்பவில்லை - ஜோஸ் பட்லர்!

Updated: Wed, Nov 09 2022 18:33 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை 2022 தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. குரூப் 1இல் இருந்து சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. அதேபோல், குரூப் இரண்டில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா, பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன.

இதில் இன்று சிட்னியில் நடைபெற்றஅரையிறுதியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இதையடுத்து நாளை அடிலெய்டில் நடைபெறவுள்ள அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகளும் மோதவுள்ளன. இதில் வெற்றிபெறும் அணிகள் நவம்பர் 13ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் பங்கேற்கும்.

இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டி குறித்து இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் கூறுகையில், “அரையிறுதியில் இந்தியாவை எதிர்கொள்ள நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். என்னுடைய பார்வையில், உலகின் சிறந்த மைதானத்தில், சிறந்த அணியை எதிர்கொள்ள இருக்கிறோம். 

எங்களுக்கு ரசிகர்களின் மகத்தான ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன். உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுவதை பார்க்க விரும்பவில்லை. ஆகவே, அது நடக்காமல் இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்" என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை