டி20 உலகக்கோப்பை: பயிற்சி ஆட்டத்தில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகள் வெற்றி!

Updated: Thu, Oct 14 2021 20:37 IST
Image Source: Google

ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது அக்டோபர் 17ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடரின் முதல் சுற்றுப்போட்டிகளில் விளையாடும் அணிகளுக்கான பயிற்சி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன.

அயர்லாந்து - வங்கதேசம்

அபுதாபியில் நடைபெற்ற அயர்லாந்து - வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களைக் குவித்தது. அதன்பின் கடின இலக்கை துரத்திய வங்கதேச அணி 144 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் அயர்லாந்து அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இலங்கை - பப்புவா நியூ கினியா

அபுதாபியில் நடைபெற்ற மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் இலங்கை-பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களைச் சேர்த்தது. இலக்கை துரத்திய பப்புவா நியூ கினியா அணி 20 ஓவர்களில் 123 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் இலங்கை அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

நெதர்லாந்து - ஓமன்

துபாயில் நடைபெற்ற நெதர்லாந்து - ஓமன் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில்பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 165 ரன்களை சேர்த்தது. அதன்பின் இலக்கை துரத்திய ஓமன் அணியால் 20 ஓவர்களில் 161 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன் மூலம் நெதர்லாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. 

ஸ்காட்லாந்து - நமிபியா

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

துபாயில் நடைபெற்ற மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் ஸ்காட்லாந்து - நமிபியா அணிகள் விளையாடின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 204 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இமாலய இலக்கை துரத்திய நமிபியா அணி 20 ஓவர்களில் 184 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஸ்காட்லாந்து 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை