விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 24ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்த்து முதல் போட்டியில் விளையாட உள்ளது. இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளை எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றது. 

Advertisement

இந்த இரண்டு போட்டியிலும் இந்திய அணியின் ஓப்பனர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். குறிப்பாக லோகேஷ் ராகுல், ரோஹித் சர்மா, இஷான் கிஷன் ஆகிய மூவரும் துவக்க வீரர்களாக இறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

Advertisement

இதன் காரணமாக தொடக்க வீரர்களுக்கான இடத்தில் நல்ல போட்டி நிலவுகிறது. எது எப்படி இருப்பினும் அனுபவ வீரர்களான ரோகித் மற்றும் ராகுல் ஆகியோரே தொடக்க வீரராக களமிறங்குவார்கள். இதன் காரணமாக இஷான் கிஷனுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் போகும்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் 46 பந்துகளை சந்தித்த அவர் 70 ரன்கள் குவித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் அவரால் மிடில் ஆர்டரில் அந்த அளவு பிரமாதமாக ஆட முடியுமா என்பது தெரியாது. மேலும் ஐபிஎல் தொடரில் கூட ஓப்பனராக அதிரடி காட்டிய இஷான் கிஷன் மிடில் ஆர்டரில் சொதப்பி வந்தார். அதேவேளையில் சூர்யகுமார் யாதவ் மிடில் ஆர்டரில் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அதுமட்டுமின்றி பவுலர்களை மைதானத்தின் அனைத்து பகுதிகளுக்கும் விளாசும் சூர்யகுமார் யாதவ் நிச்சயம் இந்திய அணியின் 4ஆவது வீரராக சூர்யகுமார் யாதவ் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக இஷான் கிஷன் அணியில் இடம்பிடிக்க வாய்ப்பே இல்லை. 

எனவே நிச்சயம் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்றும் ஒருவேளை அவருக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால் இஷான் கிஷன் துவக்க வீரராகவும், ராகுல் மிடில் ஆர்டரில் விளையாட வேண்டிய அவசியம் உள்ளது.

Advertisement

இதன் காரணமாக இஷான் கிஷனுக்கு இந்த உலக கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைக்காது என்று தோன்றுகிறது. மேலும் தற்போது உள்ள ஃபார்மில் ராகுல் மற்றும் ரோஹித் ஆகியோர் தொடர்ந்து விளையாடும் பட்சத்தில் இந்திய அணி பெரிய ரன் குவிப்பை கொடுக்க முடியும் என்பதும் எவ்வளவு பெரியதாக இலக்காக இருந்தாலும் சேசிங் செய்யவும் முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News