ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 17ஆம் தேதி முதல் ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
Advertisement
அந்த வகையில் இத்தொடருக்கான பாகிஸ்தான் அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்திருந்த சாயிப் மக்சூத் காயமடைந்துள்ளார்.
Advertisement
இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் காயமடைந்த சாயிப் மக்சூத்திர்கு பதிலாக, அனுபவ வீரர் சோயிப் மாலிக்கை மீண்டும் டி20 அணியில் சேர்த்துள்ளது.
முன்னதாக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான் அணியில் சோயிப் மாலிக்கின் பெயர் இடம்பெறாதது சர்ச்சையான நிலையில், தற்போது அவர் மீண்டும் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளது ரசிகர்களை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.