டி20 உலகக்கோப்பை: ரசிகர்களை சுவாரஸ்யப்படுத்திய கரோனா கட்டுப்பாடு!
இந்தியாவில் நடைபெறவிருந்த இந்த டி20 உலகக்கோப்பை தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் அங்கு வரும் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவருக்கும் கடுமையான கரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் தொடரின் போது குறிப்பிட்ட அளவிற்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது முழு அளவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்காக ரசிகர்கள் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு முடிவுகளுடன் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எனினும் டி20 உலகக்கோப்பை போட்டிகளை காண உலகமெங்கும் இருந்தும் ரசிகர்கள் திரளுவார்கள் என்பதால் கரோனா அச்சுறுத்தல் விதிமுறைகளை மேற்கொள்வதில் அதிகாரிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அதற்காக அபுதாபி மைதானத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள விஷயம் சுவாரஸ்யமாக உள்ளது. அதாவது ரசிகர்கள் அமரும் இடத்தில் இருக்கைகளை வைக்காமல், அதற்கு மாறாக வேலி போன்று அமைத்துள்ளனர். குறிப்பிட்ட இடைவெளிகளை விட்டு குழந்தைகள் படுக்கைகளை விட்டு எங்கும் சென்றுவிடாமல் இருக்க வைப்பது போன்று ரசிகர்கள் எங்கும் நகர்ந்து சென்றுவிடக்கூடாது என இது போன்ற வடிவமைத்துள்ளனர்.
Also Read: டி20 உலகக் கோப்பை 2021
இது ரசிகர்களிடையே வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இன்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா போட்டியின் போது இவை ஏற்படுத்தப்பட்டிருந்தது. மற்ற மைதானங்களிலும் இதே நடைமுறை பின்பற்ற முடியுமா என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. இன்னும் வேறு சில ஏற்பாடுகளையும் செய்ய அதிகாரிகள் குழு ஆலோசனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.