டி20 உலகக்கோப்பை: நமீபியாவை 121 ரன்களில் சுருட்டியது நெதர்லாந்து!

Updated: Tue, Oct 18 2022 11:05 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை தொடரின் 8ஆவாது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்றில் நுழைவதற்காக தரவரிசையில் கடைசி எட்டு இடங்களில் இருக்கும் அணிகள் கடுமையாக போட்டியிட்டு வருகின்றன. 

அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெறும் 5ஆவது போட்டியில் நெதர்லாந்து - நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நமீபியா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து களமிறங்கிய நமீபியா அணியில் டிவான் லா காக் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் ஜோடி சேர்ந்த வான் லிகான் - ஸ்டீபன் பார்ட் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறுக சிறுக ஸ்கோரை உயர்த்தினர். 

அதன்பின் 20 ரன்களில் லீகானும், 19 ரன்களில் பார்ட்டும், அடுத்தி களமிறங்கிய ஜான் நிகோல் ரன்கள் ஏதுமின்றி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதையடுத்து இணைந்து கேப்டன் மராஸ்மஸ் - ஜான் ஃப்ரைலிங்க் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

ஆனால் கடைசி போட்டியில் அதிரடி காட்டிய நமீபிய அணியின் மிடில் ஆர்டர் பெரும் சொதப்பலாக அமைந்தது. அதன்விளைவாக 47 பந்துகளில் 43 ரன்களை மட்டுமே எடுத்த் ஃப்ரைலிங்க் ஆட்டமிழந்து வெளியேறினார். அவருக்கு அடுத்த பந்திலேயே கேப்டன் எராஸ்மஸும் 16 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் நமீபியா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களை மட்டுமே எடுத்தது. நெதர்லாந்து தரப்பில் பாஸ் டி லீட் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை