டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேவை 130 ரன்னில் சுருட்டியது பாகிஸ்தான்!

Updated: Thu, Oct 27 2022 18:09 IST
Image Source: Google

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் கடைசி அதிர்ச்சி தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, இன்றைய போட்டியில் ஜிம்பாப்வேவை எதிர்கொண்டது.

பெர்த்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது. பாகிஸ்தான் அணி ஏற்கென்வே முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ளதால் இப்போட்டியில் கட்டாயம் வெற்றிபெற்றாக வேண்டிய சூழலில் விளையாடி வருகிறது.

அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு கிரேய்க் எர்வின் - வெஸ்லி மதவெரே இணை யாரும் எதிர்பார்க்காத அதிரடி தொடக்கத்தைக் கொடுத்து பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை மிரளவைத்தனர். 

பின் 17 ரன்களில் மதவேரே ஆட்டமிழக்க, 19 ரன்களில் எர்வினும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மில்டன் ஷும்பா 8 ரன்களிலும், சிக்கந்தர் ரஸா 9 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். 

மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சியான் வில்லியம்ஸ் 31 ரன்களோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் வந்த பிராட் எவன்ஸ் ஓரளவு அதிரடி காட்டி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் ஜிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் முகமது வாசிம் ஜூனியர் 4 விக்கெட்டுகளையும், சதாப் கான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை