டி20 உலகக்கோப்பை: சாம் கரண பந்துவீச்சில் சுருண்டது ஆஃப்கானிஸ்தான்!
டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் இன்று தொடங்கியுள்ளன. இன்று குரூப் 1-ல் இடம்பெற்றுள்ள அணிகளுக்கு இடையேயான போட்டிகள் நடக்கின்றன. சூப்பர் 12 சுற்றில் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் மோதிய முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பெர்த்தில் நடக்கும் அடுத்த போட்டியில் இங்கிலாந்தும் ஆஃப்கானிஸ்தானும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. அந்த அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இப்ராகிம் ஸ்த்ரன் 32 ரன்கள் எடுத்தார். உஸ்மான் கனி பொறுப்புடன் விளையாடி 30 ரன்களை எடுத்தார்.
இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவரில் 112 ரன்களில் சுருண்டது. இங்கிலாந்து சார்பில் சாம் கர்ரன் 5 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், மார்க் வுட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்குகிறது.