டி20 உலகக்கோப்பை: மீண்டும் அசத்திய ரஸா; சூப்பர் 12-க்கு முன்னேறியது ஜிம்பாப்வே!

Updated: Fri, Oct 21 2022 16:45 IST
Image Source: Google

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றுக்கு 8 முன்னணி அணிகள் நேரடியாக தகுதிபெற்ற நிலையில், எஞ்சிய 4 அணிகளை தீர்மானிக்க 8 அணிகள் கலந்துகொண்டு தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாடின.

தகுதிச்சுற்று போட்டியில் குரூப் ஏ-விலிருந்து இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. குரூப் பி-யிலிருந்து அயர்லாந்து அணி முன்னேறிவிட்ட, இந்த க்ரூப்பிலிருந்து 2வது அணியை தீர்மானிக்கும் போட்டி ஜிம்பாப்வே - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே நடந்துவருகிறது.

ஹோபர்ட்டில் நடந்துவரும் இந்த போட்டியில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த  ஸ்காட்லாந்து அணியின் தொடக்க வீரர் ஜார்ஜ் முன்சி ஒரு முனையில் நிலைத்து நின்று பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் மறுமுனையில் மற்றவீரர்கள் சோபிக்கவில்லை. 

மற்றொரு தொடக்க வீரரான மைக்கேல் ஜோன்ஸ் 4 ரன்னிலும், மேத்யூ க்ராஸ் ஒரு ரன்னிலும்,  ரிச்சி பெரிங்டன் 13 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். மெக்லீட் 25 ரன்கள் அடித்தார். ஆனால் மந்தமாக பேட்டிங் விளையாடி 26 பந்தில் அந்த 25 ரன்களை அடித்தார். அரைசதம் அடித்த ஜார்ஜ் முன்ஸி 51 பந்தில் 54 ரன்கள் அடித்தார். 20 ஓவரில் ஸ்காட்லாந்து அணி 132 ரன்கள் அடித்து.

இதையடுத்து இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணிக்கு பேரதிர்ச்சியாக ரேஜிஸ் சகாப்வா 4, வெஸ்லி மதவெரே, சீன் வில்லியம்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் கிரெய்க் எர்வின் - சிக்கந்தர் ரஸா இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய எர்வின் அரைசதம் கடந்தார். 

அதன்பின் மறுமுனையில் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சிகந்தர் ரஸா 40 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து மறுனையில் அரைசதம் கடந்து விளையாடி வந்த கிரெய்க் எர்வினும் 58 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

இருப்பினும் ஜிம்பாப்வே அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிப்பெற்று அசத்தியுள்ளது. இதையடுத்து ஜிம்பாப்வே அணி இந்தியா, பாகிஸ்தான் அணிகள் உள்ள குரூப் பி பிரிவில் இடம்பிடித்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை